• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு

கனடா

கனடாவின் நோவா ஸ்கோர்சியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலைமை ஏற்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவினை அகற்றுவதற்கு மத்திய அரசாங்கத்தின் உதவியை மாகாண அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் நோவா ஸ்கோசியாவின் கேப் பிரிட்டோன் பகுதியில் பனிப்பொழிவு நிலைமையினால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சில இடங்களில் நூறு சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவை அகற்றுவதற்கு கனரக கருவிகள் தேவைப்படுவதாக நோவாஸ்கோசியா மாகாணத்தின் அவசர முகாமைத்துவ அமைச்சர் ஜோன் லோர் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் அவசர ஆயத்த நிலை அமைச்சர் இந்த கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கும் உதவிகளை வழங்குமாறு மாகாண அமைச்சர் கோரியுள்ளார்.

ஏற்கனவே அண்டைய மாகாணங்களிடமும் உதவிகள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாகாணத்தில் வழமைக்கு மாறாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply