• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் வயதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

சினிமா

உணவின் ருசி மூலம் மலர்ந்த காதல்!
Film:21mu Tiffin
Year:2021
Language:Gujarathi
Cinematography:Parth Chauhan
Director:Vijaigiri Bava
21mu Tiffin எனும் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது,இத்திரைப்படம்.சிறுகதையை எழுதியவர் RoamMori.
மிக எளிமையான கதையை திரைக்கதை வல்லமையால் நம் மனதை கொள்ளையடிக்கிறார்கள்.
நாயகி வீடு,Batchulers அறை,ரோடு-படம் முழுக்க இந்த முன்றே இடங்கள்தான் கதை நகரும் இடங்கள்.
மிக மிக குறைந்த முதலீட்டில்  நம் மன உணர்வுகளை தட்டி எழுப்பும் அருமையான திரைப்படம்.
இந்தப் படத்தில் மகளைக் காட்டிலும் தாய்தான் மிக அழகாக இருப்பார். கதைக்காக அப்படித்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பல பெண்கள் இளம்பருவத்தில் இருப்பதைக் காட்டிலும் நடுத்தர வயதில் மிக அழகாக மாறிவிடுவார்கள்.
'Lunch box',எனும் திரைப்படம்,உணவின் மூலம் ஏற்படும் ஒரு புதிய உறவை மிக அழகாக சொல்லியிருக்கும்.
மனைவியை இழந்த நடுத்தரவயது ஆண் ஒருவனுக்கும், ஒரு இளம் மனைவி ஒருத்திக்கும் உணவின் மூலம் உருவெடுக்கும் உறவை மிக நாகரிகமாக கையாண்டு சொல்லியிருப்பார்கள்.
அதேபோல்,நடுத்தரவயது பெண்மணிக்கும், 25 வயது வாலிபனுக்கும் உணவின் மூலம் ஊற்றெடுக்கும் காதலை கவித்துவமாக சொல்லும் திரைப்படம்தான் 21mu Tiffin.
விஜயா,20 வயதுள்ள இளம்பெண்ணுக்கு தாய்.மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவள்.
விஜயா,சுவையாக சமைப்பதில் கெட்டிக்காரி.ஒரு இருபது பேருக்கு மட்டும் சமையல் செய்து அனுப்பி சம்பாதிக்கிறாள்.அந்த இருபது பேரில் சில இளைஞர்களும் அடக்கம்.இவள் சமையல் செய்து அனுப்பும் சாப்பாட்டை கொண்டு செல்வதற்கென்று வயதான ஒருவரை நியமித்திருப்பாள்.
அவர் சாப்பாட்டை வாங்கிச் செல்லும்போது,அவரின் களைப்புத் தீர குளிர்பானம் தயாரித்து கொடுத்து தனது மனித நேயத்தையும் வெளிப்படுத்துவாள்.
இவள் சமையல் செய்து சம்பாதிப்பதை மகள் விரும்பவில்லை.அவளுக்கு உதவி செய்வதால் தனது படிப்பும் கெட்டுப் போவதாக நினைக்கிறாள்.

இந்த சூழ்நிலையில்,வெளியூரிலிருந்து ஒருவன் படிப்பு விஷயமாக இவள் இருக்கும் ஊருக்கு வருகிறான்.அந்த இளைஞர்களின் அறையில் தங்குகிறான்.அவர்களுக்கு வரும், அவள் தயாரித்து அனுப்பும் அந்த உணவை அவன் சாப்பிட்டவுடன், இதுவரையில் தான் அறியாத ஒரு சுவையை அவன் அனுபவிக்கிறான்.தானும்,அந்த சாப்பாட்டை தினமும் சாப்பிட வேண்டும் என விரும்புகிறான்.
சாப்பாட்டை கொண்டுவந்து கொடுக்கும் அந்த முதியவரிடம், தனக்கும் அந்த சாப்பாட்டை தயாரித்து வாங்கி வரும்படி கேட்கிறான்.ஆனால், விஜயா,'இதற்கு மேல் என்னால் சமைக்க முடியாது.என் மகளுக்கும் விருப்பமில்லை என்கிறாள்.
அவனோ,நேரிடையாக அவளுடைய வீட்டிற்கே வந்துவிடுகிறான்.அவள் தயாரித்து அனுப்பிய சாப்பாட்டின் ருசியை அணுஅணுவாக ரசித்துப் பேசுகிறான்.இதுவரையில்,இப்படியொரு பாராட்டை அவள் யாரிடமும் பெற்றதில்லையால், அவன் மீது அவளுக்கு பெருமதிப்பு ஏற்படுகிறது.அவனுக்கும் சேர்த்தே சமைக்கிறாள்.அவன் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசிய Recepie ஒன்றை ஸ்பெஷலாக தயாரித்து அனுப்புகிறாள்.
மகளுக்கோ ,அம்மாவின் மீது எரிச்சல் உண்டாகிறது.அவன் தொடர்ந்து வந்து அம்மாவிடம் பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை.
இளம் வயதில் உள்ள தன்னை கண்டுகொள்ளாமல் அம்மாவிடம் மட்டும் அவன் பேச ஆர்வப்படுவதைப் பார்த்து அவளுக்கு கோபம் வரத்தானே செய்யும்.
விஜயாவின் கணவர் இவளுடன் அன்பொழுக ரெண்டொரு வார்த்தை கூட பேசக்கூடியவர் அல்ல.வியாபாரத்திலேயே மூழ்கியிருக்கக் கூடிய மனிதர்.
சிலநாட்களில் தாயின் உணர்வை மகள் புரிந்து கொள்கிறாள்.அவர்களுடைய தொடர்பு எங்கு சென்று முடியுமோ எனும் பதட்டத்தில் இருப்பாள் மகள்.
இப்படியே தொடரும் இவர்களுடைய உறவுக்கு Speed break இருக்கத்தானே செய்யும்....
அதன்பிறகு......?
மிக யதார்த்தமான வலிமையான க்ளைமாக்ஸ்.
'எந்த துயரத்தையும் காலம் எனும் அற்புத மருந்து தீர்த்துவிடும்!'
இந்த திரைப்படத்தை திரைப்படவிழாவில் பார்த்தது.
இந்த திரைப்படம் எந்த OTT-ல் இருக்கிறதென தெரியவில்லை.தேடிப்பிடித்துப் பார்த்துவிடுங்கள்.
தியேட்டரில் படம் பார்த்து முடித்தவுடன்,இப்படத்தின் இயக்குனரை ஓடோடிச் சென்று கட்டியணைத்து, கைகுலுக்கி இரண்டொரு வார்த்தை பேசி எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தேன்.
இந்தப் படத்தை தமிழில் Remake செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஏற்ற கதைக்களம்.
இத் திரைப்படத்திற்கான விமர்சனக் காணொளி(லி)யின் இணைப்பையும் கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளேன்.அதையும் பாருங்கள்.நன்றி.

சே மணிசேகரன்
 

Leave a Reply