• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாவே வேண்டாம்னு என்ன டாக்டர் படிக்க வச்சார்

சினிமா

சினிமாவே வேண்டாம்னு என்ன டாக்டர் படிக்க வச்சார், அதுக்கு காரணம் – வெண்கல குரலோன் சீர்காழியின் மகன் சிவசிதம்பரம்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை கலைஞராக திகழ்ந்தவர் சீர்காழி கோ. சிவசிதம்பரம். இவர் கர்நாடக இசைப் பாடகர். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் ஆவார். மேலும், கிளாசிக் காலகட்ட திரையிசை மற்றும் கர்நாடக இசையில் தனித்துவமானவர்‌

இவர் தன்னுடைய இசை திறமைக்காக கலைமாமணி விருது, தமிழிசை வேந்தர் பட்டம், பத்மஸ்ரீ விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார்

என்னுடைய அப்பாவை சந்திக்க இந்த வீட்டுக்கு வராத இசை கலைஞர்களே கிடையாது. அப்பாவைப் போல நான் பாடகராக வேண்டும் என்பது தான் என்னுடைய அம்மாவின் ஆசை. ஆனால், நானும் என் அக்காவும் மருத்துவர் ஆகணும் என்று என் அப்பா ஆசைப்பட்டார்

ஆனால், என்னுடைய அம்மா சங்கீத வித்வான் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை என் இசை குருவாக்கினார். கல்லூரி படிக்கும் போதே பல கச்சேரிகளில் பாடியிருந்தேன். பொது மருத்துவ துறையில் பட்டம் மேற்படிப்பு முடித்துவிட்டு அரசு மருத்துவராகவும் வேலை செய்தேன். இதை பார்த்து என்னுடைய அப்பாவுக்கு பெருமையாக இருந்தது. என்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு மருத்துவத்துடன் மக்களை மகிழ்விக்கும் பாடகராகவும் மாறினேன்.

அதோடு நான் பாடின அபிநய சுந்தரி ஆடுகிறாள் என்ற பாட்டு என்னுடைய மனைவிக்கு ரொம்பவே பிடித்து போய் இருந்தது. அந்த பாடலை பிடித்து போய் தான் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்

தற்போது நான் மருத்துவத்துறை ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்று மனநிறைவுடன் கூறியிருக்கிறார்.

பிரசாந்த் 
 

Leave a Reply