• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தகுதியானவருக்கே ஜனாதிபதிப் பதவியை வழங்க வேண்டும் - பொதுஜன பெரமுன வலியுறுத்து

இலங்கை

ஜனாதிபதியாக வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும்போது, தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால நாட்டின் நிலை பற்றியும் சந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எமது கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அவர்,

மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஜனாதிபதி என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற பதவியை தாமே வைத்திருப்பதை விட, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனவும் சமல் ராஜபக்ஷ வலியுத்தினார்.

போட்டியிட அனைவருக்கும் ஆசை உள்ளது எனினும், ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபரொருவர், எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்? பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளாரா? அவற்றை சரியாக நிறைவேற்றியிருக்கிறாரா? அவருக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்பது குறித்து ஆராய்ந்தே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply