• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிசிரிவி நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு

இலங்கை

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்ற சாரதிகளை சிசிரிவி கமராக்கள் மூலம் கண்டறியும் புதிய நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்ற சாரதிகளை சிசிரிவி கமராக்கள் மூலம் கண்டறியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம்.

பொலிசாரின் இந்த புதிய நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும் பேருந்து பாதையில் பயணிப்பதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply