• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. 

சினிமா

சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். 

அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். 

சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.

சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 

1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.

ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். 

பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.

ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.

அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன்.

நடிகை -பத்மினி!

Leave a Reply