• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே குடும்பத்தில் 6 சகோதரிகளை மொத்தமாக கடத்திய மர்ம குழு

சினிமா

நைஜீரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரிகள் மற்றும் அவர்களின் தந்தை கடத்தப்பட்ட நிலையில், தற்போது ஐந்து சகோதரிகளை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை இரவு வடக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவ கூட்டு நடவடிக்கையில் அந்த சகோதரிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய சகோதரிகள் இந்த மாத தொடக்கத்தில் அபுஜாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மர்ம குழு ஒன்றால் கடத்தப்பட்டனர். அதில் ஒரு சகோதரி அந்த குழுவினரால் பின்னர் கொல்லப்பட்டார்.

மட்டுமின்றி அந்த சகோதரிகளை விடுவிக்க குறித்த கடத்தல் குழுவானது பெருந்தொகை கோரியுள்ளது. ஆனால் தற்போது அவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தகவல் இல்லை.

இதனிடையே, நைஜீரிய பொலிசார் தெரிவிக்கையில், மீட்கப்பட்ட ஐந்து சகோதரிகளும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஜனவரி 2ம் திகதி Bwari பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 6 சகோதரிகள் மற்றும் அவர்களது தந்தை உள்ளிட்டவர்களை குழு ஒன்று வலுக்கட்டாயமாக கடத்தியுள்ளது.

இந்த சகோதரிகளின் உறவினர் ஒருவர் அவர்களை மீட்க போராடியுள்ளார். ஆனால் அந்த குழுவினர் அந்த உறவினரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த நிலையில் பணம் திரட்டும் பொருட்டு அந்த சகோதரிகளின் தந்தையை கடத்தல் குழுவினர் விடுவித்துள்ளனர்.

ஆனால் பணம் அளிக்க தாமதமான நிலையில், சகோதரிகளில் ஒருவரான 21 வயது நபீஹா என்பவரை அந்த குழு கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடத்தல் குழுவினர் அந்த சகோதரிகளை விடுவிக்க 68,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான உள்ளூர் பணம் கோரியுள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ப்ணம் அளிக்கப்பட்டதா என்ற தகவலை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர். இந்த தொகையை திரட்ட பொதுமக்களும் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply