• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமல் - சிவகார்த்திகேயன் படத்தின் டீசர்.. விமர்சனம் கூறிய நெல்சன்.. 

சினிமா

முதல் முறையாக கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்திற்கு எஸ் கே 21 என ஒர்க்கிங் டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அயலான் படத்தை தொடர்ந்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருக்கிறது.

இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று, சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது தான். கண்டிப்பாக இந்த கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கமல் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தின் டீசர் தயாராகிவிட்டது என தெரியவந்துள்ளது. ஆம், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் எஸ் கே 21 படத்தின் டீசரை பார்த்துவிட்டார். அதன் விமர்சனத்தை மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் 'எஸ் கே 21 படத்தின் டீசரை பார்த்துவிட்டேன். இது வெறித்தனமாக இருக்கிறது. இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை உலகம் பார்க்கும் வரை காத்திருக்க முடியவில்லை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி. எஸ் கே 21 படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என பதிவு செய்துள்ளார்.

இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர். ஆகையால் விரைவில் எஸ் கே 21 படத்தின் டீசர் அப்டேட் வெளிவரவுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களே கெட் ரெடி ஃபார் இட்..
 

Leave a Reply