• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Samuel harrisனு சேலத்தில் ஒருத்தர் பாலிடெக்னிக்ல ஃபோர்மேனா இருந்தாரு..

சினிமா

இவர் மனைவி அமிர்தம். இவங்க மகன் பெயர் மோசஸ் ஜெயக்குமார். சாமுவேல் சர்சுகளில் மௌத் ஆர்கன் வாசிப்பார். தினமும் வீட்டில் இறைவனை நினைத்து பாடுவது வழக்கம். அப்படித்தான் மோசஸ் ஜெயக்குமாருக்கும் இசை ஆர்வம் வந்தது. தந்தைக்கு சேலத்திலிருந்து மதுரைக்கு டிரான்ஸ்ஃபர் வர மோசஸ்சின் பள்ளிக்கல்லூரி படிப்பு மதுரை ஆயிற்று. 

தந்தை மோசசை வயலின் கற்கச்சொல்ல மோசஸ் வயலின் கற்று இசை கச்சேரிகளில் வாசிக்கத்தொடங்குகிறார். அப்போது இவரின் சகோதரர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இசைக்கச்சேரிக்கு வாசிக்க செல்ல இவருக்கும் திரை இசையமைப்பாளராக வேண்டும் என ஆர்வம் பிறந்தது. பின்னாளில் வேறொரு நண்பர் சகாயத்தில் மோசஸ் சென்னை நோக்கிப்பயணித்தார். 
 

வயலின் வாசித்து இசைக்கச்சேரிகளில் சம்பளம் பெற்று வளர்ந்து வந்தார். இடையில் விஸ்வநாதன், சங்கர்கணேஷ் போன்றோரின் இசைக்குழுவிலும் வாசிக்க சென்றார். இடையிடையே தன் புதிய குழுவின் இசை நிகழ்ச்சிகளையும் செய்து வந்தார். 

மோசஸ் சங்கர் கணேஷ் இசைக்குழுவில் இருந்த சமயம் மரகதம் சந்திரசேகர் என்கிற காங்கிரஸ்காரர் அடுத்த நாள் பிரதமர் ராஜீவ் காந்தி வருவதாதாகவும் அவருடைய மேடையில்  பாட சங்கர்-கணேஷின் குழுவை புக் செய்தார். கணேஷ் மோசஸ் வரவேண்டும் என கச்சேரிக்கு அழைக்க மோசஸ் தன் அடுத்தநாள் இசைப்பதிவு முடிந்து மாலை தான் வரமுடியும் என்கிறார். அடுத்தநாள் மாலை மிஷின் கன் செக்யூரிட்டியுடன் மோசஸ் ஸ்ரீபெரும்புதூர் மேடைக்கு செல்ல நிகழ்ச்சி துவங்குகிறது. ராஜீவ் காரிலிருந்து இறங்கி மேடைக்கு அருகே வருவதை வெள்ளை உடைகளில் இருந்த சங்கர் கணேஷ் குழுவினர் வாசித்துக்கொண்டே அடுத்துள்ள டிவியை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். திடீரென ஒரு பெரிய வெடிச்சத்தம். ராஜீவ் காந்தியை மோசஸ் பார்த்துக்கொண்டிக்கும் போதே புகைமண்டலமாகி ரத்தத்துளிகளால் சங்கர்கணேஷ் குழுவினரின் வெள்ளை ஆடைகள் சிவப்பாகின்றன. சங்கரின் சட்டைப்பைக்குள் ஒரு கண் வந்து விழுந்ததாக சொல்கிறார் மோசஸ். இதே போல் இலங்கை நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் போதும் அங்கும் இவர் மேடையேறி வாசிக்கும் முன் குண்டு வெடிகிறது. அனைவரும் ஓடி வந்து ரூமுக்குள் புகுந்து வாசலைபூட்டிக்கொள்கின்றனர். மோசஸோடு ஓடி வந்த மலேசியா வாசுதேவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறார். அந்த சம்பவங்கள் மோசஸ் ஜெயக்குமார் என்பவரை தீவிர மத விசுவாசியாக்கி 'பிஷப்' வரை அவர் பதவியில் செல்கிறார்.

இதற்கு முன்பே மோசஸ் தன் இசைக்குழுவுக்கு பாடவந்த இந்து நாயுடு வகுப்பு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் மோசஸ் வீட்டில் எதிர்ப்பு. பெண் வீட்டில் சம்மதிக்க ராச்சேல் என்கிற பெயரில் மதம் மாறி திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு ஒரு மகன் 1975ல் பிறக்க ஜெயராஜ் என பெயரிடுகின்றனர். அடுத்த வருடத்திலேயே தங்கை ஜெயராணி பிறக்கிறாள்.

ஜெயராஜ் இசைச்சூழ்நிலையில் வளர்ந்ததால் கிடார் வாசிக்க ப்ரியப்பட்டு அதில் நன்றாக வாசிக்கத்தொடங்குகிறார். இளையராஜா, ரஹ்மான் என வாசித்து, வாசித்து திரைப்பாடல்களைப்பற்றிய அறிவை வளர்த்துக்கொள்கிறார். கீ போர்ட் வாசிக்க கற்றுக்கொண்ட ஹாரிஸ் முதலில் விளம்பர ஜிங்கில்ஸ் செய்யத்துவங்குகிறார். விஜய் நடித்த கோக் விளம்பர இசை ஜெயராஜுடையது தான்.

ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் 'மின்னலே' படத்தை துவக்கியதும் இசையமைப்பாளராக ஜெயராஜை அறிமுகப்படுத்துகிறார். அப்படித்தான் ஜெயராஜ் தாத்தா Harris பெயரை சேர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் என ஹிட் இசை இயக்குனராகிறார். 

மின்னலேயின் ஸ்பெஷல் என சொன்னால் அதன் அதிரடிப்பாடல்களுக்கிடையில் போட்ட  'வசீகரா' பாடல் தான். அதன் இழையோடும் தன்மைக்கு பாம்பே ஜெயஸ்ரீ யின் குரல் அற்புத தேன் ஊற்று. 'இவன் யாரோ...இவன் யாரோ' பாட்டெல்லாம் படு Fresh வரிகள் தமிழ் சினிமா பாடலுக்கு. கவிஞர் தாமரை என்கிற புதுமை விரும்பியால் பாடல்கள் ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டன..

பின் ஹாரிஸ் திருபிப்பார்க்கவேயில்லை..வெற்றிகளோடு  தனக்கு பிடித்த சுமா என்கிற பெண்ணை காதலித்து joyse ஆக்கி திருமணம் செய்து கொள்கிறார். இரண்டு குழந்தைகள்...

இன்று Harris ஜெயராஜுக்கு பிறந்தநாள். இடையில் தொய்வுக்கு சென்றாலும் அவர் இசை அவரை மீண்டும் உயர்வுக்கு கொண்டு செல்லும்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Selvan Anbu

Leave a Reply