• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் பல அவமானங்களை தாண்டி வளர்ந்தவர்தான் விஜயகாந்த்.

சினிமா

தமிழ் சினிமாவில் பல அவமானங்களை தாண்டி வளர்ந்தவர்தான் விஜயகாந்த். பல தடைகளையு,ம் சதிகளையும் சந்தித்தவர். விஜயகாந்தை வளரவிடக்கூடாது என ஒரு பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பொதுவாக சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தவர்கள் வளர்ந்த பின்னர் அதேபோல் மற்றவர்களிடம் நடந்துகொள்வார்கள். ஏனெனில், தான் பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் மற்றவர்களும் சந்திக்கட்டும் என்கிற கோபம் அவர்களுக்கு இருக்கும். சினிமாவில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால், விஜயகாந்த் இதற்கு நேர் எதிராக இருந்தார்.  

தான் பட்ட கஷ்டத்தை சினிமாவில் யாரும் படக்கூடாது.. தான் அது போல நடந்துக்கொள்ளக்கூடாது எனவும் நினைத்தார். குறிப்பாக அவரின் படப்பிடிப்பு தளத்தில் யாரும் அவமானப்படக்கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார். ஒருபக்கம், தன்னை ஒதுக்கியவர்களுக்கும் விஜயகாந்த் உதவியிருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர் என சில இயக்குனர்களின் இயக்கங்களில் மட்டுமே விஜயகாந்த் அதிகமாக நடித்திருக்கிறார். மணிரத்னம், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா உள்ளிட்ட சில இயக்குனர்கள் விஜயகாந்த் பக்கம் வரவேமாட்டார்கள். அதுபற்றி விஜயகாந்தும் கவலைப்பட்டதில்லை.                பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் மனதில் உறுதி வேண்டும். கதையின் நாயகியாக சுஹாசினி நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் ரஜினி உள்ளிட்ட நடிகர்களு
டன் நடனம் ஆடுவது போல ஒரு பாடல் காட்சி வரும். ரஜினி, சத்தியராஜ் ஆகியோர் சம்மதித்து விட்டார்கள். அப்போது விஜயகாந்த் பீக்கில் இருந்தார். அவரிடம் கேட்டால் சம்மதிப்பாரா என்கிற தயக்கம் பாலச்சந்தருக்கு இருந்துள்ளது.

மற்ற நடிகராக இருந்தால் ‘என்னை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கியது இல்லை.. நான் ஏன் அவர் படத்தில் அதுவும் சில நொடிகள் மட்டும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும்?.. முடியாது’ என சொல்லி இருப்பார்கள். ஆனால், பாலச்சந்தரின் உதவியாளர் விஜயகாந்தை தொடர்பு கொண்டபோது ‘பாலச்சந்தர் சார் அவரின் படத்தில் ஒரு பாடலில் நான் நடிக்க வேண்டும் என சொன்னாரா?.. ஷூட்டிங் எப்போன்னு சொல்லுங்க.. வரேன்’ என சொல்லி நடித்து கொடுத்தார் விஜயகாந்த். அதுதான் விஜயகாந்தின் குணம்.

Mahesakumar Tavarayan


 

Leave a Reply