• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா வைத்த செக்

சினிமா

3 நாள் கூட தாண்டாது... படம் நல்லா இல்ல... இளையராஜா வைத்த செக் : பதிலடி கொடுத்த சிவாஜி

1985-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முதல் மரியாதை.

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ஒரு படத்தை அவர் முன்பே படம் ஓடாது இதெல்லாம் ஒரு படமா படம் எனக்கு பிடிக்கவில்லை என்று இளையராஜா வேண்டா வெறுப்பாக இசையமைத்ததாகவும் பின்னாளில் அந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

1977-ம் ஆண்டு கமல்ஹாசன் – ரஜினிகாந்த் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தொடர்ந்து புதிய வார்ப்புகள், கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே கருத்தம்மா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தான் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துவிட்டால் அந்த படம் குறித்து யார் எந்த விதமாக கருத்துக்கள் சொன்னாலும், பாரதிராஜா தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது அவருடன் இருந்த பலரும் தற்போது கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர்களான பஞ்சு அருணாச்சலம் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் படம் பிடிக்கவில்லை ஓடாது என்று சொன்னாலும் அவர்களுக்கு எதிராக பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் தான் பாரதிராஜா. 1985-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முதல் மரியாதை.

தமிழ் சினிமாவில் இன்றும் பாராட்டப்படும் ஒரு படமாக உள்ள முதல் மரியாதை படத்தை இயக்கி முடித்த பாரதிராஜா வழக்கம்போல் தனது எழுத்தாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு பின்னணி இசை இல்லாமல் போட்டு காட்டியுள்ளார். இதில் படத்தை பார்த்த சிவாஜி குடும்பத்தினர் படத்தை வெகுவாக பாராட்டிய நிலையில், சிவாஜி இயக்குனர் பாராதிராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு படம் பார்த்த இயக்குனர் எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம், என்னயா படம் எடுத்துருக்க எனக்கு பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார். பஞ்சு அருணாச்சலம் கூறிய இந்த கருத்து பாரதிராஜாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் பின்னணி இசை சேர்ப்புக்காக படம் இளையராஜாவுக்காக திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த இளையராஜாவும் இந்த படம் ஓடாது என்ன படம் எடுத்திருக்க 3 நாள் கூட தாண்டாது என்று கூறியுள்ளார். ஆனால் பாரதிராஜா இந்த நெகடீவ் கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல் கதை மீது இருந்த நம்பிக்கையில் படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் 3 நாட்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு கூட்டமே இல்லாத நிலையில், மக்களின் பேச்சுக்கள் படத்தை பற்றி பாசிட்டீவாக இருந்ததால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களின் வருகை அதிகரித்து முதல் மரியாதை படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 50 வயதை கடந்த நாயகனாக சிவாஜியின் வித்தியாசமான நடிப்பு பலரும் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த வெற்றியின் மூலம் படம் பற்றி நெகடீவாக கருத்து சொன்ன பலருக்கும் பாரதிராஜா பதிலடி கொடுத்திருந்தார்.

தமிழச்சி கயல்விழி


 

Leave a Reply