• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் - பதிவு செய்தால் கிடைக்கும் பலன்கள் 

இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள 3 மில்லியன் இலங்கையர்களில் சிறிய அளவினரே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள இலங்கையர்களில் வெகு சிறிய அளவினரே இலங்கை நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக செல்லும் இலங்கையர்களே அங்கு பாதிப்புகளில் சிக்கி கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்து செல்பவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு செல்வதன் மூலம் அவர்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கூடுதலான பிரதிபலன்களும் கிடைக்கின்றன என தெரிவித்தார்.

சிலர் இலங்கை நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்கின்றனர், இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பதிவு செய்து செல்பவர்கள் அங்கு வெளிநாட்டில் சிக்கல்களை எதிர் கொண்டால் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சகம் கவனம் செலுத்தும்.

3 மில்லியன் இலங்கை மக்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள நிலையில், அவர்கள் எதிர்நோக்க நேரும் பாதிப்புகள் சம்பந்தமாக ஆயிரத்திற்கும் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  
 

Leave a Reply