• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவ ஆராய்ச்சிகளை வேகப்படுத்த உருவாக்கப்பட்ட குளோனிங் குரங்கு

மருத்துவ ஆராய்ச்சிக்களை வேக படுத்துவதற்காக குளோன் செய்யப்பட்ட ரீசஸ் குரங்குகளை சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனித உடலியல் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால் மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக அளவு பயன்படுத்தப்படும் ரீசஸ் குரங்குகளை(rhesus monkey) சீன ஆராய்ச்சியாளர்கள் குளோன் செய்துள்ளனர்.
  
இதன் மூலம் மருந்துகள் பரிசோதனை(medical research) வேகப்படுத்தப்படும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் சோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக உருவாக்கப்பட்ட குளோன்கள் உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது.

ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன அறிவியல் பல்கலைக்கழகத்தின்(University of Chinese Academy of Sciences) மருத்துவர் ஃபாலோங் லு (Falong Lu) வெற்றிக்கரமான இந்த முடிவால் அனைவரும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

பாலூட்டி இனங்களில் பாலின கலப்பு மூலம் தந்தை மற்றும் தாயின் மரபணுக்கள் இணைந்து சந்ததியை உருவாக்கும், குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்குவது ஆகும்.

இந்த முறைப்படி 1996ம் ஆண்டு பிரபலமான குளோனிங்(cloning) விலங்கான டோலி செம்மறி ஆடு(Dolly the sheep) உருவாக்கப்பட்டது. 
 

Leave a Reply