• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்த் விட்ட ஒரு அறை ராதிகாவுக்கு காது கேட்கல - பூந்தோட்ட காவல்காரன் பிளாஷ்பேக்

சினிமா

என்னை இயக்குநராக்கியதும் அவர் தான். என் உயிரையும் காப்பாற்றியதும் அவர் தான்- இயக்குநர் செந்தில்நாதன்.

பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய செந்தில்நாதன் கேப்டன் விஜயகாந்த் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்த் ராதிகாவை அறைந்ததில் பின்னணியில் நடந்தது குறித்தும் கூறியுள்ளார்.

இயக்குநர் செந்தில்நாதன் ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். செந்தில்நாதன் கேப்டன் உடன் நெருங்கிப் பழகியவர், நண்பரும் ஆவார். தொகுப்பாளர் கேள்விகளுக்கு செந்தில்நாதன் சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து பதிலளித்தார்.

கேப்டன் விஜயகாந்த் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது?

முதல் முதலில் ஜாவா மோட்டா பைக்கில் விஜயராஜ் என்ற பெயரில் தான் அவரை சந்தித்தேன். நான் எஸ்.ஏ. சந்திர சேகருடன் பணிபுரிந்தேன். அவர் கேப்டனை வைத்து படங்கள் இயக்கினார். கேப்டனின் 10க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். எனக்கும் அவருக்கும் எப்படி என்றே தெரியாமல் நல்ல பழக்கம் ஏற்பட்டது. நல்ல உறவு உள்ளது. என்னுடைய முதல் படத்தை அவர் தயாரித்தார். ஹீரோவாக நடித்தார். என்னை இயக்குநராக்கியது அவர்தான். என் உயிரையும் காப்பாற்றினார்.

படத்தில் ஒரு காட்சியில் 2 காதலர்கள் ஊருக்கு பயந்து ஓடி வரும் போது மலையில் இருந்து தவறி விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டடது. கீழே விஜயகாந்த் இருப்பார். அப்போது காதலர்களாக நடித்தவர்கள் சரியாக நடிக்கவில்லை. நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க மலை உச்சிக்கு சென்றேன். நான் மலையில் இருந்து உருண்டு விழுந்தேன். எல்லோரும் பயந்து ஓடிவந்தார்கள்.

என்னை யாரையும் தொட வேண்டாம் என விஜயகாந்த் கூறினார். என் முகம், கை, கால்களில் கற்கள் ஏறி இருந்தது. ஒடிகொலன், பஞ்சு எடுத்து வரச் சொல்லி மெதுவாக எடுத்தார். ஒடிகொலன் வைத்ததால் தான் ரத்தம் வரவில்லை. இல்லை என்றால் ரத்தம் அதிகமாகி இருக்கும். அவர் தான் அன்றைக்கு என்னை காப்பாற்றியவர். செந்தில் போல் 50% நடித்தால் போதும் என எப்போதும் சொல்வார்.

பூந்தோட்ட காவல்காரன் படத்தில் ஒரு காட்சியில் ராதிகாவை விஜயகாந்த் அறைந்தார் அது பற்றி? அது கிளைமாக்ஸ் காட்சியில் நடந்தது. ராதிகாவை விஜயகாந்த் அடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. விஜயகாந்த் அடிக்கும் போது ராதிகா விலக வேண்டும். Timing தவறியதால் நிஜமாகவே அரைந்துவிட்டார். விஜயகாந்த்திற்கு பலம் அதிகம். அடித்தால் தாங்க முடியாது. ராதிகாவிற்கு காது கேட்கவில்லை. ராதிகா அப்படியே உட்கார்ந்து விட்டார். அரை மணி நேரம் ராதிகாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரது அடியை யாராலும் தாங்க முடியாது என்று கூறினார்.

டைரக்டர் மதுரை மைந்தன்

Leave a Reply