• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல் - பிரதமர் ரிஷி சுனக் அளித்த உறுதி

இந்திய வம்சாவளியினர் உட்பட நூற்றுக்கணக்கான சப்-போஸ்ட் மாஸ்டர்கள் மோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டிய கணக்கியல் ஊழலில் இழப்பீட்டு செயல்முறையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
  
1990 களின் பிற்பகுதியில் ஹொரைசன் என்ற தவறான தகவல் தொழில்நுட்ப அமைப்பு சம்பந்தப்பட்ட வரலாற்று ஊழல் பற்றி பிரதமர் ரிஷி சுனக்கிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தவறுதலாக தண்டனை பெற்றவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் நீதித்துறை அமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்து வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக பலர் இழப்பீட்டுக்கு என காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், இதுவரை ஆயிரக்கணக்கானோருக்க்கு சுமார் 150 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இழப்பீடுக்காக காத்திருப்பவர்களுக்கு இடைக்கால உதவியாக 600,000 பவுண்டுகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவார்கள் என்றால் தீர்வளிக்கப்படும் என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தவறான தகவல் தொழில்நுட்ப அமைப்பு சம்பந்தப்பட்ட ஊழலால் 700 க்கும் மேற்பட்ட துணை அஞ்சலக அதிகாரிகள் சட்ட உதவியை நாடியுள்ளனர். தற்போது 47 வயதாகும் சீமா பிஸ்வாஸ் என்பவர் கடந்த 2021 ஏப்ரல் மாதம் தன் மீதான ஊழல் வழக்குகள் ரத்தானதாக தெரிவித்திருந்தார்.

இவருடன் இன்னொரு இந்திய வம்சாவளி நபரான Vijay Parekh என்பவர் உட்பட 39 பேர்கள் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி, வெற்றி பெற்றுள்ளனர்.

மிஸ்ரா என்பவர் 2005ல் ஊழல் வழக்கில் சிக்கி 15 மாதம் தண்டனை பெற்றார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். மொத்தமாக 75,000 பவுண்டுகள் தமது அஞ்சலகத்தில் இருந்து இவர் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 
 

Leave a Reply