• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாண்டோ சின்னப்பா தேவர் !

சினிமா

சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான்.

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர்.

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்!

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.

தேவர் அளவுக்கு சாமர்த்தியம் வாரிசுகளுக்கு இல்லை…அன்னைபூமி என்று ஒரு 3D படம் எடுத்து பூண்டோடு அழிந்தார்கள்…மருமகன் R.தியாகராஜன்,M.A.திருமுகம் போன்றவர்கள் சொன்னதை செய்பவர்கள்…சொல்லுவதற்கு தேவர் இல்லை….டிரைவர் இல்லாத பஸ் போல ஆகிவிட்டது தேவர் Films..

தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.

சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது

சம்சாரம் அது மின்சாரம் என்ற Avm தயாரிப்பு படம் விசுவினால் எடுக்கப்பட்டது….வெறும் 5 லட்சம் ரூபாய் விசுவிடம் பேசி மொத்த படத்தையும் எடுக்கவைத்து திரையிட்டதில் 1 கோடி ரூபாய் லாபம்….இது போன்ற வருமானம் இருந்தால் மட்டுமே AVM படம் தயாரிப்பார்கள்…

சிவாஜி படம் ரஜினி நடிக்க எடுத்து 90 கோடி செலவில் பெருமளவு Bank Loan எடுத்தார்கள்….ஒரளவு பெரிய பட்ஜெட் அவங்க தயாரித்த படங்களிலேயே அது ஒன்று தான்….அது 110 கோடி ரூபாய் வருமானம் பார்த்தது….அவங்க நோக்கம் "சின்னகல்லு பெத்த லாபம்"…லைக்கா பட நிறுவனம் அளவுக்கு இறங்க பயம்….எனவே ஒதுங்கிவிட்டார்கள்….தேவர் நிறுவனம் சூழ்நிலையினாலும்

AVM புத்திசாலிதனத்தாலும் சினிமா தயாரிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்…..

Leave a Reply