• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் திலகத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த கவுரவம்

சினிமா

சிக்கல் சண்முக சுந்தரம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய இரு கேரக்டரை தவிர மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற கேரக்டர் என்றால் அது வைத்தி கேரக்டர் தான்.

தமிழ்நாட்டின் பண்பாடு பாரம்பரியத்தை மிகுந்த காதலோ சொன்ன படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக சிவாஜியும், மோனகாம்பாள் கேரக்டரில் பத்மினியும் நடித்திருந்தனர். நாகேஷ், பாலையா உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் பலரும் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு கதை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.

ஆனந்த விகடன் நிரூபரான எஸ்.எஸ்.வாசனிடம் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு, ஒரு நாள் தஞ்சை மாவட்டத்தை பற்றியும், அங்கே பாரம்பரியமாக இருக்கும் பரதநாட்டியம், நாதஸ்வரத்தை இணைந்து நீங்கள் ஏன் ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுத கூடாது என்று எஸ்.எஸ்.வாசன் கேட்க, அங்கே பிறந்தது தான் தில்லானா மோகனாம்பாள் கதை. நாயகன் நாயகி மட்டுமல்லாமல் கதையில் வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் சமமான பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இந்த கையில் சிக்கல் சண்முக சுந்தரம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய இரு கேரக்டரை தவி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற கேரக்டர் என்றால் அது வைத்தி கேரக்டர் தான். இந்த கதை 1958-ம் ஆண்டே ஆனந்த விகடன் பத்திரிக்கையில் நிறைவடைந்துவிட்டாலும் அடுத்து 10 வருடங்கள் கழித்து தான் படமாக்கப்பட்டது. இந்த கதை தொடராக வெளியில் வந்தபோது இதை படமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஏ.பி.நாகராஜன்.

1968-ம் ஆண்டு சிவாஜி, பத்மினி, பாலையா நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானது. படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனே தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவாஜி, பத்மியை தவிர்த்து நடிகர் நாகேஷ் நடித்திருந்த வைத்தி கேரக்டர் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தனது உடல் மொழியின் மூலம் நாகேஷ் வைத்தியாகவே வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத பாரம்பரிய காதல் காவியம் என்று வர்ணிக்கப்படும் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு பெருமை சேர்த்த மற்றொரு பிரபலம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது ரஷ்யாவில் இருந்து கலாச்சாரக்குழு ஒன்று இந்தியாவுக்கு வந்தது. இந்த குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களுக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பெரிய விருந்து வைத்தார். இந்த விருந்துக்கு பின் அவர்களுடன் இணைந்து எம்.ஜி.ஆர் ஒரு சினிமா பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ரஷ்யா நாட்டு கலாச்சாரக்குழுவுடன் எம்.ஜி.ஆர் திரைப்படம் பார்க்க போகிறார் என்றதும், அன்று எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை திரையிட தயாராகி வந்தனர். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் எங்க வீட்டு பிள்ளை வேண்டாம் தில்லானா மோகனாம்பாள் படத்தை போடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடியே தில்லானா மோகனாம்பாள் படம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரஷ்ய கலாச்சார குழுவுடன் படத்தை ரசித்து பார்த்தார் எம்.ஜி.ஆர்.

படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் தம்பி சிவாஜி அருமையான கலைஞன். சிவாஜி இருக்கும் நாட்டில் நான் முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று பேசியதாக ஒரு தகவலும் உண்டு.
 

Leave a Reply