• Welcome to TamilsGuide
செய்திகள் 1

57 வயதிலும் மணம் வீசும் பொத்தி வச்ச மல்லிக மொட்டு - நடிகை ரேவதி

சினிமா

இவர் கேரளாவின் கொச்சியில், பிறந்தவர். இவரது தந்தை மலாங்க் கெலுன்னி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்தவர். தாய் லலிதா கெலுன்னி. இவரது படிப்புக்காக இவர்கள் குடும்பம் பிற்காலத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.

ஆஷா கெலுன்னி நாயர், நடிகை ரேவதியின் உண்மையான பெயர். துறுதுறு பேச்சு, துள்ளல் நடனம், துடிப்பான நடிப்பு என நடிகை ரேவதி என்றாலே இவையெல்லாம் நம் நினைவுக்கு வருபவை. அந்த காலத்தில் இவருடன் நடித்த சக நடிகைகளை அனைவருமே பன்முன திறமையுடனும், நடிப்பில் தனித்தன்மையுடனும் சிறந்து விளங்கியவர்கள். ரேவதியும் தனது தனித்திறமைகள் மற்றும் சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் அதிக படங்களிலும், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்ததுடன், இந்தியிலும் நடித்துள்ளார். மூன்று தேசிய விருதுகள், 6 ஃபிலிம் பேர் விருதுகள், சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் கேரளாவின் கொச்சியில், பிறந்தவர். இவரது தந்தை மலாங்க் கெலுன்னி நாயர் ராணுவத்தில் மேஜராக இருந்தவர். தாய் லலிதா கெலுன்னி. இவரது படிப்புக்காக இவர்கள் குடும்பம் பிற்காலத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.

அவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருமுறை பள்ளியில் நடந்த ஃபேஷன் ஷோ புகைப்படங்கள் ஒரு வார பத்திரிக்கையில் வெளியாகின. அந்த புகைப்படங்களை பார்த்த இயக்குனர் பாரதி ராஜா, அவரது மண் வாசனை படத்திற்கு புதுமுக நடிகையை தேடிக்கொண்டிருந்தவர், ரேவதியை அவரது படத்திற்கு தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து 1983ம் ஆண்டு மண் வாசனை படத்தில் முகம் காட்டிய ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களை தன் திறமையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார். இந்தப்படம் வெள்ளி விழாவை கொண்டாடியது. இவருக்கு முதல் படத்திலேயே தென்னிந்திய நடிகைக்கான சிறப்பு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. கட்டாதே கிளிக்கூண்டு படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். 

இந்தப்படமும் நன்றாக ஓடி இவருக்கு இரு படங்களும் புகழை பெற்றுத்தந்தன. புதுமைப்பெண் திரைப்படத்தில் இவர் சிறப்பாக நடித்திருப்பார். இவர் நடித்து ஹிட்டான இன்றும் மக்களால் பேசக்கூடிய படங்களாக கை கொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மணிரத்னம் இயக்கிய மவுன ராகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரேவதி.

தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கிய ரேவதிக்கு புன்னகை மன்னன் படம் திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு மலையாளப்படம் சிறந்த நடிகைக்கான முதல் விருதை பெற்றுக்கொடுத்தது. கிழக்கு வாசல் படம் இவருக்கு தமிழில் சிறந்த நடிகை விருதை பெற்றுக்கொடுத்தது. சல்மான் கானுடன் இவர் இந்தி படத்திலும் கலக்கியுள்ளார். 

தேவர் மகன் படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. 90களில் பிஸியான நடிகையாக இருந்தார். இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் அவ்வப்போது தலை காட்டினார். மறுபடியும், அஞ்சலி, தலைமுறை, மகளிர் மட்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்தவர்.

இவர் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனினும் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். ரேவதி பரத நாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply