• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலை தேடி அலையாத இடம் இல்லை - இறுதியில் வீட்டில் இருந்தே தொடங்கிய தொழில்: இன்று ரூ 800 கோடி சந்தை மதிப்பு 

பல நிறுவனங்களில் வேலை தேடி ஏமாற்றமடைந்த பெண் ஒருவர், தமது குடியிருப்பிலேயே தொடங்கிய தொழிலின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 800 கோடி.

டெல்லியில் பிறந்த Poonam Gupta அரசு பாடசாலையில் தனது கல்வியை முடித்துள்ளார். தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், நெதர்லாந்தில் பட்டமேற்படிப்பும் முடித்துள்ளார்.

இந்த நிலையில் 2002ல் திருமணம் முடித்த Poonam Gupta கணவருடன் ஸ்கொட்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார். ஆனால் ஸ்கொட்லாந்தில் அவருக்கு உரிய வேலை கிடைக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

பல நிறுவனங்களில் வேலை தேடி அலைந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தான் சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

2003ல் தனது PG Paper Company Ltd என்ற காகித மறுசுழற்சி நிறுவனத்தை பூனம் தொடங்கியுள்ளார். ஸ்கொட்லாந்தின் Kilmacolm பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஸ்கொட்லாந்து அரசாங்கத்திடம் இருந்து பெற்ற வெறும் 1 லட்ச ரூபாய் நிதியில் தனது தொழிலைத் தொடங்கினார்.

பூனம் குப்தாவின் நிறுவனமானது ஆரம்பத்தில் கைவிடப்பட்ட பொருட்களை மீட்பதிலும் மீண்டும் பயன்படுத்துவதிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தியது. தற்போது PG Paper நிறுவனம் உலகெங்கும் சுமார் 53 நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதியும் ஏற்றுமதியும் செய்து வருகிறது.

மட்டுமின்றி, PG Paper நிறுவனம் பிரித்தானியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் காகித நிறுவனங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. 19 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 800 கோடி என்றே கூறப்படுகிறது.

ஸ்கொட்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது 350 பேர்கள் பணியாற்றிவருகின்றனர். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான ஒரே வழி, அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள் ஒருபோதும் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள் என்பதை பூனம் குப்தா நிரூபித்திருக்கிறார்.
 

Leave a Reply