• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவால் உலகப் போர், இயற்கை பேரிடர் - 2024 தொடர்பில் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு 

கொரோனா பெருந்தொற்று, கால்பந்து உலகக் கிண்ணம் வெல்லும் நாடு, உக்ரைன் போர் உள்ளிட்ட பலவற்றை கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பிலும் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான 37 வயது Athos Salomé பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் 5 சிலிர்க்கவைக்கும் கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.

அதில், 2024ல் மனிதர்கள் இறுதியாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்றும் அது திரைப்பட பாணியில் நடந்துவிடாது எனவும் மனிதர்களும் வேற்றுகிரகவாசிகளும் சமிக்ஞைகள் மூலம் தொடர்புகொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்து புதிய தொடக்கம் அமையும் என்றும் கணித்துள்ளார். அத்துடன் கனிம வளத்துடன் கூடிய சிறுகோள் ஒன்று பூமியில் 2024ல் பாதுகாப்பாக தரையிறங்கும் என்றும், அதுவே வல்லரசு நாடுகளிடையே போட்டியை உருவாக்கும் என்றும் கணித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த சிறுகோளால் சீனா, ரஷ்யா மற்றும் அவர்களது ஆதரவு நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே உறவில் கடும் விரிசல் ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

3வதாக ரோபோக்கள் அதன் மனித படைப்பாளர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு மொழியை உருவாக்குவார்கள் என்றும், அது மனித சமூகத்திற்கு ஆபத்தாக முடியும் என்றும் கணித்துள்ளார்.

உக்ரைன் விவகாரம் மற்றும் விளாடிமிர் புடின் அல்லது இஸ்ரேல்- ஹமாஸ் போரினால் மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பில்லை என்று கணித்துள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ், 2024ல் தென் சீன கடல் அல்லது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சைபர் தாக்குதலை அடுத்து மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்றும் கணித்துள்ளார்.

அப்படியான ஒரு சூழல் உருவானால் பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2024ல் இயற்கை பேரழிவுகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ்,

மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தெற்கு சூடான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்படும் என்றார். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக இந்த நாடுகள் கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா 2024ல் நெருப்பு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்க வாய்ப்பிருப்பதாகவும், சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்கள் மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகே பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும், அதே நேரத்தில் கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்படலாம் என்றும் கணித்துள்ளார். 
 

Leave a Reply