• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவ உபகரணங்களை வழங்கிய கனடா தொழிலதிபர் கணேசன் சுகுமார் மற்றும் திரு. மகாதேவன்

இலங்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மல்லாவி அரச மருத்துவமனை ஆகியவற்றுக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை வழங்கிய கனடா தொழிலதிபர் கணேசன் சுகுமார் மற்றும் திரு. மகாதேவன் ஆகியோர்

அண்மையில் கனடா வாழ் தொழிலதிபர் கணேசன் சுகுமார் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. மகாதேவன் (Hot Breads) ஆகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மல்லாவி அரச மருத்துவமனை ஆகியவற்றுக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை வழங்கிய  வைபவங்கள் சிறப்பாக வெவ்வேறாக நடைபெற்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இயந்திரங்கள் கையளிக்கும் வைபவத்தில்  வைத்தியசாலையின் பணிப்பாளரும் வடமாகாண சுகாதாரப் பிரிவு பணிப்பாளருமான வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் கண்வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன் மற்றும் தாதிமார்கள்  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கே காணப்படும் படங்களில் கனடா வாழ் தொழிலதிபர் கணேசன் சுகுமார் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலை வழங்கி வரவேற்கப்படுவதையும்  பின்னர் வைத்தியசாலை மண்டபத்தில் அவர் உரையாற்றுவதையும் காணலாம். மல்லாவி வைத்தியசாலையில் இடம்பெற்ற கையளிப்பு வைபவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு மகாதேவன் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களோடு காணப்படுகின்றார்.

Leave a Reply