• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சோகத்தில் கேக் விற்பனையாளர்கள்

இலங்கை

கேக் விற்பனை சுமார் 75% ஆகக் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இதன்காரணமாக அண்மைக்காலமாக பேக்கரித் தொழில் துறையும் சரிவைச் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஆண்டுகளை விட கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கேக் விற்பனை 75  சதவீதம் குறைந்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகளுக்கு கிடைக்கவில்லை என்பதால் உள்ளூர் முட்டை 55 ரூபாய்க்கு வாங்கி, குறைந்த விலையில் கேக்கை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கே. ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply