• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கை

இன்று முதல் அமுலாகும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் ,ந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய டின் மீன் ஒன்றின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 280 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகள் தலா ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை விலைக்குறைப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply