• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிப்பை விட்டு வேறு துறைக்கு தாவிய நடிகை சுகன்யா..

சினிமா

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை சுகன்யா பரதநாட்டிய கலைஞர் தான். இவர் நடிப்பை விடவும் தனக்கு பரதநாட்டியம் டான்ஸ் தான் ரொம்ப பிடித்தது என்று ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். தான் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்த சுகன்யா முதல் முதலாக புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கமலுடன் மகாநதி, இந்தியன். விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகா பிரபு என பல முன்னணி கதாநாயகர்களோடு அந்த நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் இவரை புகழ வைத்து விட்டார்.

இந்த நிலையில் சமீபகாலமாக நடிகை சுகன்யா திரைப்படங்களிலும் சீரியல்களிலும் அதிகமாக நடிக்கவில்லை. 

டான்ஸ் ஸ்கூல் வைத்திருக்கும் நடிகை சுகன்யா சமீபத்தில் மலையாளத்தில் டி.என்.ஏ என்ற படம் தயாராகிக் கொண்டு வருகிறது. அந்தப் படத்திற்காக முதல் முதலில் தன்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்த இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த பாடல் மட்டும் ஹிட் ஆனால் பெண் கவிஞர் தாமரைக்கு போட்டியாக சுகன்யாவும் வலம் வருவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு உலாவருகிறது.

Leave a Reply