• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓம் நமசிவாய!

கனடா

6 மாதங்கள் மட்டுமே மீதம் இருக்கின்றது, கும்பாபிசேக ஆரம்ப நிகழ்வுகளை ஆலய பரிபாலன சபையினரும் எங்கள் பிரதம குரு சிறிராம் அவர்களும் ஆரம்பித்துள்ளது மனமகிழ்வைத்தருகின்றது.
கும்பாவிசேகத்திற்கு பின்னராக நாம் திருப்பணிகள் செய்யலாம் என கனவு காணுவது சாலச் சிறந்தது இல்லை. முட்டாள்தனமான சிந்தனை. 
தயை கூர்ந்து அனைவரும் ஒன்றாக பயணித்து முடிந்தளவு திருப்பணிகளை நிறைவு செய்ய முன்வரவேண்டும்.
கும்பாபிசேகத்திற்கு முன்னராக நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ள திருப்பணிகள் வருமாறு:
சிறிய திருப்பணிகள்:
1. வசந்தமண்டப, யாக மண்டபம் வீரபத்திரர் பெயின்றிங்
2. பின்வீதி கருங்கல் மதில்(6 அடி மட்டும்)
3. பீடங்கள்/விக்கிரகங்கள்
4. மலசல கூடங்கள் 
5. ஐயனார் சந்நிதி வாசலிற்கான கண்ணாடி கதவுகள்
பெரும் திருப்பணிகள்:
1. தெற்கு கூரை (நிறைவில்)
2. வடக்கு மற்றும் மேற்கு கூரை
3. கொடிமர மண்டபம்(கருங்கள்)
4. முன்பக்கக் கூரை(கருங்கல்/கொங்கிறீற்)
5. கருங்கல் தூண்கள்(59 தூண்கள்)
6. பிரதான சிவன் வீதி
7. ஐயனார் கொட்டகை மேல் பக்கம்
8. வடக்கு மதில் அத்திவாரம்
அவனே ஆட்டி வைத்தான்! அவனே வழிநடத்துவான்! அவனே நிறைவும் செய்வான்!
கஸ்ரத்திலும் திருப்பணிக்கு வழங்குவதுதான் தர்மம் ஆகும். நமது வீட்டில் அரிசி இல்லை என்றாலும் அன்னதானத்திற்கு ஒரு பிடி அரிசி கொடுத்தவர்கள் அல்லாவா? வாரி வழங்குவோம்!
புங்குடுதீவு தான் தோன்றீஸ்வரர் ஆலய அனைத்துலகப்பேரவை ‍ - கனடா
 

Leave a Reply