• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 8 வருடங்கள் இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்ற நண்பர்கள்

கனடா

கனடாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக கூட்டாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பியல் பங்கேற்ற மூன்று நண்பர்கள் பரிசு வென்றுள்ளனர்.

இந்த மூன்று நண்பர்களும் ஒரு மில்லியன் டாலர் பண பரிசு வென்றெடுத்துள்ளனர்.

649 லொத்தர் சீட்டில் இந்த நண்பர்கள் பரிசு வென்றுள்ளனர்.

ஸ்டிபென்டன் வைற், ஆல்ரிக் மேக்லரைன் மற்றும் ஜோசப் கலிசோ ஆகிய மூன்று நண்பர்களும் இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளனர்.

நண்பர்களுடன் இணைந்து இவ்வாறு பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

லொத்தர் சீட்டிலுப்பில் இந்த நண்பர்களுடன் இணைந்து பரிசு வென்றெடுக்க முடியும் என தாம் கருதியதாக முக்லரைன் தெரிவிக்கின்றார்.

வென்றெடுக்கப்பட்ட பண பரிசினை கொண்டு கூட்டாக முதலீடு செய்ய மூன்று நண்பர்களும் திட்டமிட்டுள்ளனர்.

சொத்து ஒன்றின் மீது முதலீடு செய்வதற்கு மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 
 

Leave a Reply