• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் - வாடிக்கையாளர்கள் பாதிப்பு

இலங்கை

டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்களின்‌ இறக்குமதிகள்‌ மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டதையடுத்து, அதன் வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் கொடுப்பதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.

டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ இலங்கையில்‌ 200 க்கும்‌ அதிகமான இறக்குமதியாளர்களைக்‌ கொண்டுள்ளதுடன்‌, அவர்களில்‌ பெரும்பாலோனார்‌ நாட்டின்‌ பொருளாதாரத்துக்கு வரி வருமானம்‌ மூலம்‌ பங்களிப்பு செய்யும்‌ 30 ஆண்‌டுகால நீண்ட வரலாற்றைக்‌ கொண்‌டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இறக்குமதி தடை செய்வதற்கு முன்னர் வருடாந்தம் டைலஸ்க்கு 12 பில்லியன் ரூபா மற்றும் குளியலறை உபகரணகங்களுக்கு 4 பில்லியன் ரூபா என மொத்தமாக சுமார் 16 பில்லியன் ரூபா வரியாக செலுத்தப்பட்டதாக அச்சங்கம்‌ சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் தற்போது தடை நீக்கப்பட்டதையடுத்து இவ் வரி இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுவாதாகவும், தற்போது 20 பில்லியனுக்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் இவ்வரியை செலுத்த தாம் தயாராக இருக்கின்றபோதிலும், உள்ளுர் டைல்ஸ் உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள 115 வீத வரியை மேலும் அதிகரிக்கும் படியாக அழுத்தம் கொடுப்பதினால், வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிக இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் இறக்குமதி செய்யப்படுகின்ற 2*2 டைல்ஸ் ஒன்றின் விலை 400 ரூபாவதாகவும், 2*1 டைல்ஸ் ஒன்றின் விலை 180 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதற்கு வரி செலுத்தி வாடிக்கையாளர்ளுக்கு 1100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது டைல்ஸ் உற்பத்திய 2000 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், இறக்குமதி டைல்ஸ்க்கான தடைநீக்கத்தையடுத்து, அவர்கள் தற்போது தமது உற்பத்தியை 1000 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.

எனினும் இறக்குமதி செய்யும் டைல்ஸ்க்கான வரியை அதிகரிக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் டைல்ஸை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர் என டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.
 

Leave a Reply