• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகைப்படம் பற்றி கலைஞர் சொன்ன தகவல் ....

சினிமா

ஆனந்த விகடன் புகைப்படத்தின் பின்னணி விஷயங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக, முரசொலி அலுவலகத்தில் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது ...
புகைப்படத்தைக் கையில் வாங்கிப் பார்த்த நிமிடத்தில், டக்கென்று இதழோரத்தில் வெடித்துப் பூத்தது கலைஞருடைய அந்தப் பிரத்யேக புன்னகைப் பூ! "இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" என்று நம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கலைஞர், இப்படியும் அப்படியுமாகச் சாய்த்து வெகு நேரம் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
"இந்தம்மாவோட 100-வது படமான 'திருமாங்கல்யம்' படத்தோட விழாவுக்குக்கூட என்னைத்தான் விருது கொடுக்கும்படி கேட்டுக்கிட்டாங்க. பல்கலைக்கழக சென்டினரி ஹால்லதான் விழா நடந்தது. ஆனா, அந்த விழாவுக்கு எம்.ஜி.ஆர். வரலை. அப்போ அவங்களுக்குள்ளே 'டெர்ம்ஸ்' சரியில்லே" என்று சிரித்தார் கலைஞர்.

"எங்கள் தங்கம் படவிழா போட்டோவாக இருக்கலாம்' என்று, பெட்டிக் கடைக்காரர் லத்தீப் கூறிய விஷயத்தைக் கலைஞரிடம் கூறினோம்.
"இருக்கலாம். ஆனா, அதுக்கு சிவாஜிகணேசன் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லையே! ஒருவேளை, அந்தப் பட பூஜையாக இருக்கலாம்" என்று யோசித்த கலைஞர், "ஒரு விஷயம் தெளிவாத் தெரியுது. அதாவது, நான் முதலமைச்சரா இருந்தப்போ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதிலும் 71-ம் வருஷத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நண்பர் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க-விலேதான் இருந்தார். இந்தப் படத்தைப் பத்தி மிகச் சரியான தகவல்களைக் கேட்கணும்னா ஏ.எல்.எஸ்-கிட்டேதான் கேட்க முடியும். ஆனா, இப்போ அவர் உயிரோட இல்லையே!" என்று கூறிவிட்டு, புகைப்படத்தை நம் கையில் கொடுக்கும் முன், மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்தில் போட்டோவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார் கலைஞர்.
- காலப்பெட்டகம் - விகடன், 1993
புகைப்படத்தில் இருப்பது ...
கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் எ எல் சீனிவாசன்,
சிவாஜி கணேசன்,
கலைஞர், எம்ஜிஆர். & ஜெயலலிதா

 

Leave a Reply