• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் – நீதி அமைச்சர்

இலங்கை

காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தில் சுமார் 14,000 முறைப்பாடுகள் கிடைத்த போதும் 4795 விசாரணைகளே நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நீதித்துறை செயல்முறையை மேலும் வலுப்படுத்தவும் செயற்திறன்மிக்கதாக மாற்றும் வகையிலும் எட்டு புதிய சட்ட மூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் இயங்கும் நுண் கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply