• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் சைக்கிளோட்டம்

இலங்கை

உலக எய்ட்ஸ் தினமான இன்று(01) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம் நிந்தவூரில் இடம்பெற்றது.

நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சைக்கிளோட்ட நிகழ்வில், நிந்தவூர் லிவிங் வெல் (Living Well) அமைப்பின் சைக்கிளோட்ட வீரர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.
 

Leave a Reply