• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார குற்றவாளிகளுக்கு சலுகைகள் கிடைக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி திட்டம்

இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்துவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தாய் நாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருகின்றது.

இந்நிலையில் அவர்களின் குடியுரிமைகளை இல்லாதொழிக்க முழு நீதித்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டத்தை அக்கட்சி ஆரம்பித்துள்ளது.

பொருளாதார குற்றவாளிகளின் குடிமை உரிமையை இரத்து செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொது நிதியைப் பயன்படுத்தி அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதை நிறுத்த முழு நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து தேவையானவற்றை செய்ய வேண்டியது ஜனாதிபதியே என்றாலும் ரணில் விக்ரமசிங்க அதனை செய்ய மாட்டார் என்பதனால் அவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான விடயங்களை ஜனாதிபதி செயலாளரே கையாள்வதால் அவருக்கு எதிராக உத்தரவைப் பெற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply