• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேசும் படம்

சினிமா

பேசும் படம்
நவம்பர் 27,  1987
தவறான வழியில் வரும் சொகுசு மட்டுமல்ல, காதலும் கூட நிலைக்காது என்கிற கவித்துவமான நியாயம் 
படத்தின் மைய கரு.
சார்லி சாப்ளின்  காலத்து மௌன படம் போல ஒரு  இந்திய படம்.
வசனமே இல்லாமல் முக பாவனைகளே போதும் என புரிய வைப்பதற்கு கமலை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.
அமலா
அபாரமான கூட்டணி.
 முக்கியமான காட்சி ....
 தன்னிடம் திடீரென்று பணம் சேர்ந்துவிட்டதால், ‘இதை வாங்கித் தரட்டுமா... அதை வாங்கித் தரட்டுமா?' என்று கடை கடையாக அமலாவைக் கூட்டிச் செல்வார் கமல். ஆனால் அமலாவோ, ஒரு பாழடைந்த கட்டடத்தின் சுவரில் வளர்ந்திருக்கும் பூவைக் காட்டுவார். மிகச் சிரமப்பட்டு ஏறி அதை எடுத்துத் தரும் கமலுக்கு, அதிலிருந்து ஒரு பூவை மட்டும் தந்து விட்டு எதிர்பாராத கணத்தில் ஒரு முத்தமும் தந்து விடைபெறுவார் அமலா. அந்த ஒற்றைப் பூவை பிரசாதம் போல் கையில் ஏந்திச் செல்வார் கமல். அவருடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழும். அதை எடுக்கச் செல்லும் சமயத்தில் அந்தப் பூவை காலால் தெரியாமல் மிதித்து நசுக்கிவிடுவார். இப்படிக் கவிதையான காட்சிகளுக்குள் அறம் சார்ந்த செய்திகளையும் புதைத்து வைத்திருந்தார் சீனிவாசராவ்.
எல்.வைத்தியநாதனின் பின்னணி இசை
இந்தப் படத்தின் கதையை ஆரம்பத்தில் சோகச் சுவையுடன் எழுதியிருந்தார் இயக்குநர். பிறகு சார்லி சாப்ளின் பாணியில் ‘டிராஜிக் காமெடியாக’ எழுதி திரைக்கதையை மாற்றினார். 
கமல் வாழும் விடுதியைச் சுற்றியுள்ள தெருக்கள், தோட்டா தரணியால் ‘செட்டாக’ போடப்பட்டன. கட்டடத்தின் மேலே கமல் தங்கியிருக்கும் வீடும் படத்திற்காகப் புதிதாகக் கட்டப்பட்டது. ‘
புஷ்பக்’ என்கிற பெயரில் சித்திரிக்கப்படும் ஹோட்டல், பெங்களூரில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதி. அங்குப் படப்பிடிப்பை நடத்த ஹோட்டல் நிர்வாகம் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ‘இந்தப் படம் வந்த பிறகு உங்கள் ஹோட்டல் உலகம் பூராவும் பிரபலமாகும்’ என்று தயாரிப்பாளர் சொன்ன பிறகு சம்மதித்திருக்கிறார்கள்.
 புஷ்பக்
வசனம் இல்லாத படம் என்பதால் நடிப்பைத் தாண்டி பின்னணி இசையும் முக்கியமானது. காட்சிகளின் உணர்ச்சிகளை இசையால்தான் இட்டு நிரப்ப முடியும். குறைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு எல்.வைத்தியநாதன் தந்திருக்கும் ‘மினிமலிச’ பின்னணி இசை பல இடங்களில் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. சித்தார் கலைஞர் ஜனார்த்தனன் மிட்டாவின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்தது. 
கெளரிசங்கரின் ஒளிப்பதிவும் காட்சிக் கோணங்களும் அருமை. பெரும்பான்மையான காட்சிகள் ஹோட்டலில் நிகழ்வது போல் திரைக்கதை அமைந்திருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் படமாக்கியிருந்தார்கள்.
சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். எந்தவொரு திரைப்படமும் காட்சிகள் வழியாகத்தான் நகர்த்தப்பட வேண்டும். ஆனால் இன்னமும் கூட வசனத்தின் தாக்கத்திலிருந்து இந்தியச் சினிமா பெரிதும் வெளிவரவில்லை. வசனமே இல்லாமல் இந்தத் திரைப்படத்தில் வரும் பல சுவாரஸ்யமான காட்சிகளைப் பார்க்கும் போது ‘சினிமாவிற்கு வசனம் என்பது தேவைதானா?’ என்கிற பிரமிப்பையும் கேள்வியையும் சீனிவாசராவ் ஏற்படுத்தி விடுகிறார்.

பேசும் படம் | புஷ்பக்பேசும் படம் | புஷ்பக்
பரிசோதனை முயற்சி என்பதைத் தாண்டி, கமல், அமலா உள்ளிட்டவர்களின் அட்டகாசமான நடிப்பு, பிளாக் காமெடி நகைச்சுவைக் காட்சிகள், சீனிவாசராவின் திறமையான இயக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்தத் திரைப்படத்தை இன்றும் கூட பார்த்து ரசிக்கலாம்.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

Paravasam Nayagan
 

Leave a Reply