• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் வாடகை பிரச்சினை காரணமாக ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த பெண்ணின் அனுபவம்

பிரித்தானியாவில் 15 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த பெண்ணொருவர், வாடகை பிரச்சினை தாங்கமுடியாமல், வேறெந்த நாட்டிலாவது போய் நிம்மதியாக வாழலாம் என ஜேர்மனிக்கு வந்துள்ளார்.

ஜேர்மனியில் வீட்டு வாடகை பிரச்சினை உள்ளதா என்பதைக் குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.

பிரித்தானியாவில், 15 ஆண்டுகளாக லண்டன் முதல் பிரைட்டன் வரையிலான பல இடங்களில் வாடகை வீடுகளில் வசித்துவந்துள்ளார் இசைக்கலைஞரான Bex Burch (39). 10 முறை வீடு மாற்றியிருக்கிறார், இரண்டு முறை வீட்டை விட்டு வெளியேறப்பட்டிருக்கிறார்.

சரி, வேறெங்காவது போய் நிம்மதியாக வாழலாம் என அவர் வாழ முடிவு செய்த நாடு ஜேர்மனி!

ஜேர்மனியில் நிலைமை எப்படி உள்ளது?  

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் தற்போது வசிக்கும் Bex, இரண்டு நாடுகளுக்கும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், ஜேர்மனியில் காரணமில்லாமல் வீட்டு உரிமையாளர் உங்களை வீட்டை விட்டு துரத்தமாட்டார் என்பதால், நம் வீட்டில் குடியிருக்கிறோம் என்னும் ஒரு நிம்மதியான உணர்வு ஏற்படும் என்கிறார். 

அத்துடன், லண்டனில் வாழ்ந்தபோது கொடுத்த வாடகையைவிட 30 சதவிகிதம் குறைவான வாடகையே பெர்லினில் கொடுக்கிறார், அவர் வசிக்கும் வீடு லண்டன் வீட்டைவிட 50 சதவிகிதம் அதிக இடவசதி கொண்டது! 

அதனால்தான், பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள், அதிகபட்சமாக 2.5 ஆண்டுகள் வரை மட்டுமே குடியிருக்கும் நிலையில், ஜேர்மனியிலோ, 11 ஆண்டுகள் வரை நிம்மதியாக, தொந்தரவில்லாமல் வாடகை வீடுகளில் வாழ்கிறார்கள் என்கிறார் Bex. 

பிரித்தானியாவின் வாடகை வீடு பிரச்சினைகளை இதைவிட எளிமையாக, தெளிவாக, ஒருவர் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. 

Leave a Reply