• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூமியில் மிகவும் குளிரான இடம் கனடாவில் பதிவு., அண்டார்டிகாவை விட அதிக குளிர்

கனடா

பூமியில் மிகவும் குளிரான இடம் கனடாவில் பதிவாகியுள்ளது. இப்பகுதி அண்டார்டிகாவை விட குளிராக இருக்கிறது.

வடக்கு கனடாவில் கடும் குளிர் காரணமாக உறைபனி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அண்டார்டிகாவை விட குளிராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WX-Now-ன் புதிய வானிலை அறிக்கையின்படி, பூமியில் உள்ள 10 குளிரான இடங்களில் கிட்டத்தட்ட பாதி கனடாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது திங்கள்கிழமை காலை உலகின் மிக தீவிரமான வானிலையைக் கண்காணிக்கிறது.

பூமியில் மிகவும் குளிரான இடம் கனடாவின் நுனாவுட் பிரதேசத்தில் உள்ள யுரேகா (Eureka) என்ற இடம் ஆகும். அங்கு வெப்பநிலை சாதாரணமாக -39 டிகிரி செல்சியஸ். ஆனால் காற்று குளிர்ச்சியுடன், வெப்பநிலை மீண்டும் -52 டிகிரி செல்சியஸாக குறைந்தது.

coldest place on Earth, Canada spot Eureka colder than Antarctica, Alert Nunaut, Grise Fiord Airport, பூமியில் மிகவும் குளிரான இடம் கனடாவில் பதிவு., அண்டார்டிகாவை விட அதிக குளிர்!

யுரேகாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில், அண்டார்டிகாவில் உள்ள அமுண்ட்சென்-ஸ்காட் (Amundsen-Scott) உள்ளது. இங்கு பதிவான வெப்பநிலை -48°C.

உலகில் மிகவும் குளிந்த முதல் 10 இடங்களில், இன்னும் இரண்டு இடங்கள் கனடாவில் தான் உள்ளன. அவர் 5-வது மற்றும் 8-வது இடங்களில் உள்ளன.  

coldest place on Earth, Canada spot Eureka colder than Antarctica, Alert Nunaut, Grise Fiord Airport, பூமியில் மிகவும் குளிரான இடம் கனடாவில் பதிவு., அண்டார்டிகாவை விட அதிக குளிர்!

ஐந்தாவது இடத்தில் -31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், அதே நுனாவுட் பிரதேசத்தில் இருக்கும் அலர்ட் (Alert) என்ற இடம் பதிவாகியுள்ளது. அதேபோல், எட்டாவது இடத்தில் -26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் நுனாவட்டில் உள்ள மற்றொரு இடமான கிரீஸ் ஃபியர்ட் விமான நிலையம் (Grise Fiord Airport) பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் நான்கு இடங்களை ரஷ்ய பகுதிகளும் , ஒரு இடத்தை மங்கோலி பகுதியும் அதிக குளிரை பதிவு செய்துள்ளன.
 

Leave a Reply