• Welcome to TamilsGuide
செய்திகள் 1

21 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த அமெரிக்கர்

அமெரிக்கர் ஒருவர், தான் அமெரிக்க உளவுத்துறை ஏஜண்ட் என்று பொய் சொல்லி ஏமாற்றி 21 பெண்களைத் திருமணம் செய்துள்ளார். அவர்களில் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவரான ஒரு இளம்பெண், அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
  
21 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அமெரிக்கர் 2000ஆம் ஆண்டு, கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த மேரியை (Mary Turner Thomson, 58), ஜோர்டன் (Jordan, 58) என்னும் நபர் சந்தித்துள்ளார்.

பல பொய்கள் சொல்லி மேரியை அவர் நம்பவைத்த நிலையில், 2002ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஆனால், அவ்வப்போது காணாமல் போய்விடுவாராம் ஜோர்டன். 2006ஆம் ஆண்டு மேரிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

பேசிய பெண், தான் ஜோர்டனின் மனைவி என்று கூற, சில்லென்று ஒரு காதல் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வருமே, அதேபோல, அப்படியானால் நான் யார் என மேரி கேட்க, ஜோர்டன் ஜூலி என்னும் பெண்ணை 1992ஆம் ஆண்டே முறைப்படி திருமணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் தன் முதல் மனைவியின் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகியிருக்கிறார் ஜோர்டன்.

அதற்குப் பிறகு, 2005ஆம் ஆண்டு டெனிஸ் கிங் என்னும் பெண்ணுடன் ஜோர்டன் பழகத் துவங்கிய நிலையில், டெனிஸுடைய கிரெடிட் கார்டை எடுத்து அவருக்குத் தெரியாமல் இரண்டு முறை ஜோர்டன் பணம் எடுக்க, டெனிஸ் பொலிசுக்குச் செல்ல, அப்போதுதான், ஜோர்டன் ஒரு மோசடியாளர், அவர் உளவுத்துறை ஏஜண்ட் அல்ல, அவர் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவர, அவர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தன் கணவனைக் குறித்த உண்மை தெரியவந்ததும், தன் பிள்ளைகளிடம் ஜோர்டனைக் குறித்து சொல்லி, உங்கள் தந்தை மோசமானவர் என மேரி கூற, அவரது மகள்களில் ஒருவரான Eilidh Thomsonஐ அது மிகவும் பாதித்துள்ளது.

இதற்கிடையில் மேரி தனது கணவனைக் குறித்து ஒரு புத்தகம் எழுத, அதன் மூலம் மக்கள் ஜோர்டன் Eilidhஇன் தந்தை என்பதை தெரிந்துகொள்ள, அவளது சக மாணவ மாணவிகள் அவளை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள், வம்புக்கிழுத்துள்ளார்கள்.

தன் தந்தைக்கு 21 மனைவிகள், 14 பிள்ளைகள் என்பது Eilidhக்கும் தெரியவந்துள்ளது.

2014இல் ஜோர்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரால் பிள்ளைகளுக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணி பயந்த மேரி, பிள்ளைகளுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுத்துள்ளார்.

தற்போது பல்கலையில் திரைப்படத்துறையில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார் Eilidh.

அத்துடன், தன் தந்தைக்குப் பிறந்த பல பிள்ளைகளை சந்தித்துள்ளார் அவர். அவர்களில் பலர் பெரும்பாலும் தங்கள் தந்தையின் தவறுகளால் பாதிக்கப்படவில்லை.

அத்துடன், அவர்கள் அனைவருமே தங்கள் தந்தையை மறக்கவே விரும்புவதாக தெரிவிக்கிறார் Eilidh.

சிறு வயதிலிருந்து தந்தையால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் மீறி, பிள்ளைகள் சமாளித்து வாழக் கற்றுக்கொண்டுள்ளார்கள்.

Eilidh குடும்பத்தின் கதை ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர்களைப்போல பாதிக்கப்பட்ட பலரும் அவர்களுக்கு ஆறுதல் கூறிவருகிறார்களாம்! 
 

Leave a Reply