• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் சட்டத்தை அமைச்சரவையால் மீற முடியாது

இலங்கை

விளையாட்டு சட்டத்தின் கீழ் இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இருந்தாலும், அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னரே அவ்வாறான இடைக்கால குழுவை நியமிக்க முடியும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டின் சட்டத்தை புறந்தள்ளும் வகையில் அமைச்சரவை செயற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு நாட்டின் சட்டத்தை அமைச்சரவையால் மீற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply