• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இடம் பெற்ற காதல் வைபோகமே பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

சினிமா

கே.பாக்கியராஜ் இயக்கத்தில்1979ம் ஆண்டு வெளியான மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் சுவர் இல்லாத சித்திரங்கள். இத்திரைப்படத்தில் சுதாகர், கே.பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, காந்திமதி, கல்லாப்பெட்டி சிங்காரம், சிஆர் சரஸ்வதி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கும் கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற காதல் வைபோகமே இன்றும் ஒரு ஸ்பெஷல் பாடலாகவே உள்ளது. இப்பாடல் உருவான கதை குறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அது குறித்து இதில் காண்போம்.

அதில், பாக்கியராஜ் குறித்து அவர் கூறுகையில், நாங்கள் இரண்டு பேருமே வெளியேற்றபட்டவர்கள் தான். இரண்டு படம் பண்ணிட்டீங்கனா எல்லாம் வந்துடுமா என வெளியேற்றப்பட்டோம். அப்படி தான் எங்கள் பந்தம் உருவானது. நான் பாடல் எழுதினாலும் இந்த படத்திற்கு இசையமைப்பதனால் பொறுப்புகளை குறைத்து கொள்ள விருப்பினேன்.

அதனால் தான் கவியரசர் கண்ணதாசன் அவர்களை சந்தித்து இப்பாடல் வரிகளை எழுத சொல்லலாம் என முடிவெடுத்தோம். அப்படி இப்பாடலை பெறுவதற்காக கண்ணதாசன் வீட்டிற்கே சென்றோம். அவரின் படுக்கை அறையில் தான் இப்பாடலை எழுதிகொடுத்தார். இதுமட்டும் இல்லை ஏழு சரணங்கள் எழுதி கொடுத்தார். அவரின் படுக்கை அறையில் தான் இந்த பாடலுக்கு டியூன் போட்டோம்.

அதேபோல இப்பாடலில் கண்ணதாசன் எங்கள் இருவரையும் இப்பாடலில் இணைத்து இருப்பார். வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே இந்த வரிகளில் ஜோடி கிளிகள் என எங்கள் இருவரையும் தான் சொல்லி இருப்பார். உங்களை மனதில் வைத்து தான் இப்பாடலை எழுதினேன் என கூறினார். ஜோடி கிளிகள் போல பறந்து வாங்க என வாழ்த்தி அனுப்பினார்” எனக் கூறினார்.

Sridhar Padmanaban

Leave a Reply