• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கை

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 25 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்திக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பாக கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 04 சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன.

நாம் பொதுவுடமை பொருளாதார கொள்கையை பின்பற்றியதால் நமக்கான வாய்ப்புக்கள் நழுவிச் சென்றன.

அதேபோல், 80 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் நாம் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தினோம்.

அதற்கிடையில் யுத்தம் வந்தமையால் எமது வளங்களை யுத்த வெற்றிக்காக பயன்படுத்த வேண்டியிருந்தது.

யுத்தம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அந்த நேரத்தில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத பொருட்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

இன்று சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் எம்மை கடந்துச் சென்றுள்ளன.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வரவு செலவுத் திட்ட இடைவெளி, வர்த்தக நிலைமை என்ற இரண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தாக்கம் செலுத்த கூடியவையாகும்.

வரவு – செலவுத் திட்ட இடைவெளி தொடர்பாக அவதானம் செலுத்தும் போது வரி வருமானத்தை அதிகரித்து கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டமே நாம் கடன் பெற்றுக்கொள்ளாத முதலாவது வரவு – செலவுத் திட்டமாகும்.
நாம் கடன் பெற்றுக்கொள்ளாமல் எமது செலவுகளை இவ்வாறு நிவர்த்திப்பது?

அதற்காக “வற்” வரியை அதிகரிக்க நேரிடும். அதற்காக எம்மை விமர்சித்தாலும் எதிர்காலத்தில் அதுபற்றிய புரிதல் ஏற்படும்.

புதிய ஏற்றுமதி துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply