• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க‌ருப்பு வெள்ளையில் ஒரு பிர‌ம்மாண்ட‌ம்

சினிமா

நான் ஆணையிட்டால்... என்ற இப்ப‌ட‌ம் ச‌த்யா மூவீஸ் த‌யாரிப்பு. மூன்று மணிநேர‌ம் ஓடும் இப்ப‌ட‌ம் க‌ருப்பு வெள்ளையில் ஒரு பிர‌ம்மாண்ட‌ம் என‌லாம்.

எங்க‌ வீட்டுப்பிள்ளை ப‌ட‌த்தில் இட‌ம் பெற்ற நான் ஆணையிட்டால் பாட‌ல் மிக‌ப்பிர‌ப‌ல‌மான‌து மட்டுமின்றி எம்ஜிஆருக்கே இத்த‌லைப்பு மீது ஒரு ஈர்ப்பு வ‌ந்த‌து. உட‌னே இத்த‌லைப்பை ஆர்.எம்.வீ.யிட‌ம் சொல்லி இத‌ற்கேற்ற க‌தையை உருவாக்கச்சொன்னார் மக்கள் திலகம். 

எதிர்பாராத சூழ்நிலையில் சிறுவ‌ய‌து முத‌லே திருட‌ர்க‌ளால் வ‌ளர்க்க‌ப்ப‌டும் எம்ஜிஆர் பின்ன‌ர் செல்வ‌ச்சீமான் வீட்டு வாரிசு என‌ அறிகிறார். அவ்வீட்டில் தான் மட்டும் ந‌ல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு திருப்தி அடையும் ச‌ராச‌ரி மனித‌ர் அல்லவே எம்ஜிஆர்.

த‌ன்னிட‌ம் உள்ள ஏராளமான செல்வ‌ங்க‌ளைக் கொண்டு தான் வ‌ளர்ந்த 100க்கும் மேற்ப‌ட்ட திருட‌ர்க‌ள் கூட்ட‌த்தையும், அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தையும் உய‌ர்ந்த நிலை‌க்கு கொண்டு செல்ல பாடுப‌டுகிறார். அதே நேர‌ம் இதுவ‌ரை அவ‌ர்க‌ள் செய்த குற்ற‌ச்செய‌ல்களுக்கு த‌ண்ட‌னையை பெற்று திருந்திவ‌ர‌வும் முய‌ற்சி எடுக்கிறார் த‌லைவ‌ர்.

இடையே ச‌ரோஜாதேவியுட‌ன் காத‌ல், முறைப்பெண் கே.ஆர்.விஜ‌யாவிற்கு அவ‌ள் காத‌ல‌ன் இன்ஸ்பெக்ட‌ர் அசோக‌னை சேர்த்துவைக்க போராட்ட‌ம், எம்ஜிஆரின் கூட்ட‌த்தில் இருந்த யாருக்கும் அட‌ங்காத ந‌ம்பியாருட‌ன் மோதல், ப‌ங்க‌ளா, எஸ்டேட்டை நிர்வாகிக்கும் மேனேஜ‌ர் மனோக‌ரின் தில்லுமுல்லுக‌ளை முறிய‌டிப்ப‌து, எம்ஜிஆரின் ந‌ண்ப‌ன் நாகேஷ் உத‌வியுடன் சிலதிட்ட‌ங்க‌ள் மேற்கொள்வ‌து என விறுவிறுப்பிற்கு ப‌ஞ்ச‌மில்லாத க‌தை.
1.தாய்மேல் ஆணை! த‌மிழ்மேல் ஆணை!
2. பிற‌ந்த இட‌ம்தேடி ந‌ட‌ந்த தென்ற‌லே.
3. உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வ‌ரும்
4. மேக‌ங்க‌ள் இருண்டு வ‌ந்தால் ம‌ழையென சொல்வ‌துண்டு, மனித‌ர்கள் திருந்தி வ‌ந்தால் அதை பிழையென சொல்வ‌துண்டோ.
5.ந‌ல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்
6.நான் உய‌ர உய‌ர போகிறேன், நீயும் வா!
ஆகிய இனிய பாட‌ல்க‌ள்,  சூப்ப‌ரான ச‌ண்டைக்காட்சிக‌ள், க‌ருத்தாழ‌மிக்க வ‌ச‌ன‌ங்க‌ளுட‌ன் எங்க வீட்டுப்பிள்ளை இய‌க்குன‌ர் சாணக்கியா அற்புத‌மாக இய‌க்கிய ச‌த்யா மூவிஸின் வெற்றிப்ப‌டைப்பு இக்காவிய‌ம்!

Santhanam Admk

Leave a Reply