• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆசை, நேருக்கு நேர் - இசைத் தொகுப்பு பெரும் வியப்புதான்! 

சினிமா

இதயத்தாமரை" என்றொரு படம். சங்கர் கணேஷ் இசை என்றால் அந்த ஆர்மோனியமே நம்பாது! இந்த படத்தில் வரும் “ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்” என்ற பாடல் ரொம்ப நாளாகவே இளையராஜா பாட்டு என்றே நினைத்திருந்தோம்....
அதே போல “ஆசை, நேருக்கு நேர்" இசைத் தொகுப்பு தேவா என்பது அந்தக் காலக்கட்டத்தில் பெரும் வியப்புதான்! அப்படியொரு உயர்தரம்!
அப்பவே, என்னா தேவா பாட்டு, கானா பாட்டாம்...காப்பி அடிச்சு போடறார் இதெல்லாம் பாட்டா  என வசை பாடினோம்..
இத்தனைக்கும் தேவாவின் அத்தனை பாடல்களும் ஹிட்...
காத்தடிக்குது , விதமா விதமா சோப்பு சீப்பு கண்ணாடி , கவலைப் படாதே சகோதாரா , லாலுக்கு டோல் டப்பிமா , மீனாட்சி மீனாட்சி , சலோமியா என அறுபதுக்கும் மேற்பட்ட கானா பாடல்களை தந்துள்ளார் தேவா …!
இது தவிர காதல் கோட்டையில் அவர் போட்ட சிவப்பு லோலாக்கு .. குலுங்குது.. குலுங்குது , அசர வைச்ச பாட்டு ஒரு கணம் எம்பெருமான் ராசா போட்ட மெட்டோ என திரும்பிப்பாக்க வைச்ச பாட்டு..

கன்ணோடு காண்பதெல்லாம் படத்தில் தாஜ் மகால் ஒன்று.. நாடி நரம்பை முறுக்கிய பாட்டு..
கண்ணெதிரே தோண்றினாள் படத்தில் சின்ன வண்ண‌க்கிளியே.. சிம்ரனை காதலிக்க வைச்சபாட்டு மற்றும் சலோமியா (இது ஹிந்தி பாடலின் அப்பட்டமான தழுவல்)
தேவா படத்தில் ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் ..என்ற பாட்டு காதலை பற்றி சிந்திக்காத காலத்தில் காதலிச்சு தொலைக்க வேணும் என்று ‌ வீம்பை ஏற்படுத்தின‌ பாட்டு
காதல் கோட்டையில் நலம் நலமறிய ஆவல் ..ஆஹா அந்த பாட்டின் ஆரம்ப கிட்டார் இசையை கேட்கும் போதே மனமெல்லாம் பரவசமாகும்.. முற்றத்து மல்லிகை பந்தலுக்கு கீழ் படுத்திருந்து நிலாவை ரசிக்கிற உனர்வைத்தந்த பாட்டு அது...
இப்படி இன்னும் எத்தனையோ அருமையான பாடல்கள் அவை எல்லாத்தையும் சொல்ல இடம் காணாது.
இன்று அனிருத் ஹிப்ஹாப்  என புது புதுசா வருபவர்கள் பாட்டு என்ற பெயரில் சத்தம் மட்டுமே பாட்டு என காதை நிரப்பி  தரும் இந்த கூட்டத்தை ஒப்பிடும் போது நிச்சயம் தேவா அன்று தந்தது தேனிசை தென்றலான  பாடல்கள் தான்..
அப்ப உங்களே தேவா காபி அடித்த பாடல் என கிண்டல் செய்தோம்.
அதற்க்கு சரியான தண்டனையை இன்று இசையமைப்பாளர்கள் என சிலர் தமிழ் இசை ரசிகர்களுக்கு  தருகிறார்கள்...
எத்தனை நல்ல பாடல்களை நீங்கள் எங்களுக்கு தந்திருக்கின்றீரகள் என இப்போது உணர்கின்றோம் தேவா சார்..

Pugal Machendran Pugal

Leave a Reply