• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடியை வரவு – செலவு திட்டத்தினால் தீர்க்க முடியாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு – செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டப்பின்படிப்புப் பட்டதாரிகள் சங்கத்தினால் வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சூழலை உருவாக்கும் வகையில், இம்முறை வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது காஸா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை பாதிக்கக் கூடும் என்பதால் வரவு – செலவு திட்டத்தின் சாதக தன்மைகள் மாறக்கூடும்.

மத்திய கிழக்கின் செயற்பாடுகளும் இலங்கையில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதனாலேயே உலக பலவான்கள் இணைந்து காஸா எல்லை பகுதியில் நடைபெறும் மோதல்களை தடுக்க முற்படுகின்றனர்.

கடந்த வருடத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய வரவு – செலவு திட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைத்துள்ளேன்.

ஒரேயொரு வரவு செலவு திட்டத்தினைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது.

தேர்தலை இலக்கு வைத்தே இம்முறை வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். அது உண்மையல்ல” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply