• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜோ பைடன் மனைவிக்கு இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா அவசர கடிதம்

சினிமா

ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியுள்ள சிறார் பணயக்கைதிகளை மீட்க வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மனைவி சாரா அமெரிக்க ஜனாதிபதியின் மனைவிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியுள்ள சிறார்கள் கடுமையாக அவதிப்படுவார்கள் எனவும் சாரா நெதன்யாகு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நண்பரின் மனைவி என்பதால் இந்த கடிதத்தை எழுதவில்லை என குறிப்பிட்டுள்ள சாரா நெதன்யாகு, நீங்கள் ஒரு தாயார் என்பதாலையே இந்த விவகாரம் தொடர்பில் கடிதமெழுதுவதாக தெரிவித்துள்ளார்.
  
ஒரு மாதத்திற்கும் மேலாக 32 சிறார்கள் ஹமாஸ் பிடியில் சிக்கி காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மிகக் கொடூரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்தும் குடியிருப்பில் இருந்தும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறார்கள் கண்டிப்பாக சொல்ல முடியாத துயரத்தை அனுபவிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டுள்ள சாரா நெதன்யாகு, அவர்கள் கடத்தப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 7ம் திகதி அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் கொடூரமான கொலையை நேரில் பார்த்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்ட கர்ப்பிணி ஒருவர், அந்த தீவிரவாதிகளின் முன்னிலையில் பிள்ளை பெற்றெடுத்துள்ளதாகவும் சாரா நெதன்யாகு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொலைகாரர்கள் நடுவே பச்சிளம் குழந்தையுடன் அந்த இளம் தாயாரின் மன நிலை என்ன என்பது குறித்து நான் நினைப்பது போல் உங்களால் மட்டுமே கற்பனை செய்ய முடியும் என ஜில் பைடனுக்கு எழுதிய கடிதத்தில் சாரா குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்ட பணயக்கைதி ஒருவர் வெறும் 10 மாத குழந்தை என குறிப்பிட்டுள்ள அவர், அந்த குழந்தை நடக்கவோ பேசவோ தொடங்கும் முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த சிறார்களுக்கு ஆதரவாக நாம் குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது. இவர்களை உடனடியாக விடுவிக்க நாம் கண்டிப்பாக ஆதரவளிக்க வேண்டும். ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அனைவரும் உடபடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜில் பைடனுக்கு எழுதிய கடிதம் போன்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மனைவி உட்பட பல தலைவர்களின் மனைவிகளுக்கு சாரா நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அக்டோபர் 7 முதல் நவம்பர் 13 வரையில் காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கண்மூடித்தனமான கொடூர தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறார்களின் எண்ணிக்கை 4,609 என்றே உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply