• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவச்சந்திரன் 

சினிமா

சிவச்சந்திரன் – அன்னபூரணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்தவர். ஆனந்தராகம், ரஜினிகாந்தின் பொல்லாதவன், அன்பே ஓடிவா, பூந்தளிர் அவற்றுள் சில. இவர் நடிகை லட்சுமியை காதல் திருமணம் புரிந்து கொண்டார். பிறப்பால் இவர் ஒரு கிறித்தவர். சிவாஜிகணேசனின் பெயரிலிருந்து சிவ என்ற பெயரையும் எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பெயரிலிருந்து சந்திரன் என்ற பெயரையும் இணைத்து திரைப்படத்திற்காக சிவச்சந்திரன் என்று சூட்டிக்கொண்டார்.நடிகை லட்சுமியை மணந்து கொண்டபின் நாராயணன் சிவச்சந்திரன் என்று மாற்றிக்கொண்டார்

நடிகை லட்சுமி. ‘என் உயிர் கண்ணம்மா’ உள்ளிட்ட பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். ’என் உயிர் கண்ணம்மா’வுக்கு முன்பே மூன்று நான்கு படங்க 

ஏன் சார் கல்யாணம் பண்ணினீங்க?’ன்னெல்லாம் கேட்டிருக்காங்க. ‘இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லமுடியாதுய்யா. நீங்க கேக்கறதுல எந்த அர்த்தமும் இல்லை. பார்த்தோம்... விரும்பினோம்... கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுல லவ்வு, கிவ்வு, மாலை கொடுக்கறது ரோஜா கொடுக்கறது அதெல்லாம் இல்ல.

லட்சுமியும் எங்கிட்ட எதையும் எதிர்பார்க்கலை. எங்கிட்ட கோடிக்கணக்குல பணம் இருக்கோன்னோ பெரிய நடிகர்னோ ஏகப்பட்ட சொத்து இருக்கோன்னோ பார்த்தெல்லாம் என்னை அவங்க கல்யாணம் பண்ணிக்கலை. நான் சராசரியாக சம்பாதிக்கக் கூடியவனாத்தான் இருந்தேன்.

வாழ்க்கைல நமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும். அதை நாம ஒண்ணுமே சொல்லமுடியாது. அதைப் புரிஞ்சு உணரணும். நாம உலகத்துல ஏன் பொறந்திருக்கோம், எதுக்காகப் பொறந்திருக்கோம்? இதெல்லாமே சில கடமைகளைச் செய்றதுக்காக!

இன்னொரு முக்கியமான விஷயம்... நம்ம தொழில் வெற்றிதான் நம்ம வாழ்க்கை இல்லை. இதை அண்டர்லைன் பண்ணிக்கோங்க. ’ஐயோ... நீங்க பெரிய ஸ்டாராகலையே...’ ‘ஐயோ... நீங்க பெரிய கோடீஸ்வரர் ஆகலையே’ங்கறதுல இல்ல வாழ்க்கை. நீ எதுக்காக வந்திருக்கியோ அதைச் செய். எப்படி இருக்கியோ... ஆனா சந்தோஷமா இரு. அமைதி, சந்தோஷம். இதுதான் வாழ்க்கைல முக்கியம்.

சூப்பர்ஸ்டார் ரஜினியாகணும்னு நினைச்சா, அது முடியாது. அவர், முதல் 35 வருஷம் கஷ்டப்பட்டிருந்தாரே... அதையெல்லாம் பார்த்திருந்தா, ஓடிருவோம். அந்தக் கஷ்டத்துக்கு பிரதி உபகாரம்... நீ இப்படி வரணும்னு. அப்படி வந்து நிக்கிறார் இப்போ!

எனக்கு எழுதப்பட்டிருக்கு... லட்சுமியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு! நான் லட்சுமிகிட்ட கேட்டேன்... என்னை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டேன். ஒரேவார்த்தைல சொன்னாங்க... ‘ஐ லைக் யூ’ன்னு! இதேதான் என்னோட பதிலுமா இருந்துச்சு.

மனைவி என்பதையும் தாண்டி, நான் லட்சுமிக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கறேன்னா.. அவங்க மாபெரும் நடிகை. ஆத்மார்த்தமா நடிக்கக் கூடிய நடிகை. 800 படங்கள்ல நடிச்சு, நாலு மொழிகள்ல ஆக்ட் பண்ணி, அவங்க வாங்காத விருதுகளே கிடையாது. ரெண்டு தடவை, மூணு தடவைன்னெல்லாம் விருதுகள் வாங்கிருக்காங்க.

இன்னிக்கிக் காலைல கூட அவங்கதான் சமைப்பாங்க. காபி போட்டாங்க. டிபன் பண்ணினாங்க. சமைச்சாங்க. எல்லா வேலைகளையும் அவங்கதான் செய்றாங்க. எங்களோட தொழிலையும் வாழ்க்கையையும் மிக்ஸ் பண்ணிக்கறதே இல்லை’’ என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகத் தெரிவித்தார் சிவசந்திரன்.

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

Leave a Reply