• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளதை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது - ஹேஷ வித்தானகே

இலங்கை

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தக் கொள்ளைக் கூட்டத்தை பாதுகாக்க கோப் குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ வித்தானகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிரிக்கெட் சபை நேற்று கோப் குழுவில் முன்னிலையானது. இவர்களிடம் இரண்டு மணிநேரம் சாட்சிகள் பெறப்பட்டன.

ஆனால், இந்த இரண்டு மணித்தியாலங்கள் தொடர்பாக சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த இரண்டு மணித்தியாலங்களில் மக்களின் ஆணையை காலால் எட்டியுதைக்கும் செயற்பாடுதான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கோப் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இந்த பணியை மிகவும் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.

இதற்கு மேலும் கிரிக்கெட் சபையை கோப் குழுவுக்கு முன்னிலைப்படுத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளாகவும், கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் தூய்மையானவர்களாகவும் மாற்றப்பட்டு விடுவார்கள்.

கிரிக்கெட் சபைக்கு எதிராக பாரதூரமான கேள்விகள் கேட்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கோப் குழுவின் தலைவர், இவற்றுக்கு பதில் வழங்க வேண்டாம் என கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு சைகை மூலம் காண்பித்துக் கொண்டிருந்தார்.

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தக் கொள்ளைக் கூட்டத்தை பாதுகாக்க கோப் குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

27,28,29 ஆகிய தினங்களின் கோப் குழு முன்னிலையில் கிரிக்கெட் சபையை மீண்டும் அழைப்பித்து, கோப் குழுவின் தலைவர் இன்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply