• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - இந்து ஆலயம் சேதம்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/388 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் நின்ற அரச மரம் ஆலயத்தின் மீது குடைசாய்ந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply