• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம்

இந்தோனேசியாவின் சைக்ளோப்ஸ் மலைகளில், நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பாலூட்டி இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவினர் நான்கு வார பயணத்தின் மூலம் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

சைக்ளோப்ஸ் மலைகளில், முள்ளம்பன்றியின் முதுகுத்தண்டுகள், எறும்புப் பன்றியின் மூக்கு மற்றும் மச்சத்தின் பாதங்கள் என விவரிக்கப்பட்டுள்ள நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பாலூட்டி இனத்தையே விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.

1961இல் டச்சு தாவரவியலாளர் ஒருவரால் இந்த இனம் ஒரு முறை மட்டுமே அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குறித்த பாலூட்டி விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது கூச்ச சுபாவமுள்ள, இரவு நேர பர்ரோ-வாசிகள் என்று வர்ணிக்கப்படுவதுடன், மற்றைய பாலூட்டிகளைப் போலல்லாமல் வெளியில் தென்படாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply