• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் கதை - சில பார்வைகள்

சினிமா

1. விகடன் 
"உங்க முதல் கதை எப்ப, எதில் பிரசுரமானது?" என்ற கேள்விக்கு சுஜாதா சொன்ன பதில், “முதல் கதை குமுதத்தில் பிரசுரமானது. ஆனா அதற்கு முன்பு பி.எஸ்ஸி படிக்கும்போது தெரியாத்தனமா ஒரு கதை எழுதினேன். சிவாஜி பத்திரிகை ஆபீஸ் அப்ப திருச்சி பெரியகடை வீதியிலிருந்தது. அதுதான் என்னோட முதல்கதை. அதற்குப்பிறகு எழுதல. அந்த copy என்னிடமும் இல்லை; அவங்களிடமும் இல்லை. ‘அலை ஓசை’யில் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்தேன், என்னோட முதல் கதையைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு என்னோட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, பாதி சாம்ராஜ்யத்தையும் தர்றேன்னு. கதையும் கிடைக்கல... எனக்குப் பொண்ணும் இல்ல... சாம்ராஜ்யமும் இல்ல...” (சிரிப்பு) இப்படி எதையும் சுவையாகச் சொல்லத் தெரிந்தவர் சுஜாதா.
நன்றி: விகடன். 

2. புதிய தலைமுறை
இவரது முதல் கதை எஸ். ரங்கராஜன் என்ற பெயரில் “எழுத்தில் ஹிம்சை” என்ற தலைப்பில் சிவாஜி என்ற பத்திரி்கையில் 1958 நவம்பர் 29ம் தேதி வெளிவந்தது. இவரது முதல் நாவல் ’14வது மாடி‘ என்பர். ஆனால், 1960-ல் அவர் எழுதிய ‘நைலான் கயிறு‘ என்ற நாவல் முதலில் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து கரையெல்லாம் செண்பகப்பூ, 24 ரூபாய்த் தீவு, கனவுத் தொழிற்சாலை, கொலையுதிர் காலம், நைலான் கயிறு, நில் கவனி தாக்கு, 14 நாட்கள், வானமென்னும் வீதியிலே, அனிதா இளம் மனைவி, ஜன்னல் மலர், நிர்வாண நகரம்,ஸ்ரீரங்கத்து தேவதைகள், மேற்கே ஒரு குற்றம், மறுபடியும் கணேஷ் என்று பல நாவல்களை எழுதியுள்ளார்.
1992ஆம் ஆண்டு ஆ...! என்ற புதுவித பாணியில் ஒரு நாவலையும் இவர் எழுதி இருந்தார். இதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் 'ஆ' என்றுதான் முடியும். பெரும் வரவேற்பு பெற்ற இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்ததுதான் விஜய் ஆண்டனி நடித்த 'சைத்தான்' திரைப்படம்.

நன்றி: புதிய தலைமுறை 

3. (டிவி இண்டெர்வியூ)
கோபிநாத் கேட்ட கேள்வி: நேரடியாக முதலில் எழுத ஆரம்பித்தது எப்போது?
சுஜாதா சொன்ன பதில் : சிவாஜி பத்திரிகைக்கு முதன் முதலாக ஒரு சிறுகதை எழுதியது. அதில் பெரிசா ஒண்ணுமே இல்லை..! ஏதோ தெரியாத்தனமா போட்டுட்டாங்கன்னு 
நினைக்கிறேன்..!

Leave a Reply