• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு

இலங்கை

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீPலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை நேற்றைய தினம் கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதனால் அதன் உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உறுப்பினர் என்ற கடப்பாட்டை பாரதூரமான முறையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீறியுள்ளதாகவும், அதன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தீர்மானம் குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தெரிவி;த்தார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர் மேன்முறையீட்டு செயற்பாடுகள் இடம்பெறும்.

அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை ஸ்ரீPலங்கா கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் சம்மி சில்வா கலந்து கொண்டதாகவும், ‘கிரிக் இன்ஃபோ’ குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply