• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரூ.123 கோடியை நன்கொடை அளித்த பாகிஸ்தான் தொழிலதிபரின் மகள்

சினிமா

பாகிஸ்தானில் புகழ்பெற்ற தொழிலதிபர்களின் மகள் ஒருவர் ரூ.123 கோடியை நன்கொடையாக கொடுத்த செயல் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் புகழ்பெற்ற தொழிலதிபராக இருப்பவர் சாஹித் கான். இவரை பற்றிய வணிக முதலீடுகள், சொகுசு வாழ்க்கை முறை மற்றும் நன்கொடை வழங்குதல் பற்றிய செய்திகள் சமூக ஊடங்களில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது.

இவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் விளையாட்டு தொழில்துறையில் உள்ளனர். அதனால், பெரும்பாலும் விளம்பர வெளிச்சத்தில் இருப்பார்கள். இவர்களின் பிரதான வருமானமே விளையாட்டு தொழில்களில் இருந்து தான் கிடைக்கும்.

தொழிலதிபர் சாஹித் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.99,598 கோடி ஆகும். ஜேக்சன் வில்லே ஜாக்குவார்ஸ் என்ற பெயரில் நடத்தி வரும் தேசிய கால்பந்து அணியின் மூலம் ப்ரீமியர் லீக் போட்டிகளை நடத்தி வருகிறார்.

இவரது மகன் டோனி கானும் குத்துச்சண்டை அணியை நடத்தி வருகிறார். விளையாட்டு தொடர்புடைய தொழில் தான் இவரும் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவருமே விளம்பர வட்டத்தில் உள்ளனர்.

ஆனால், சாஹித் கானின் மகளான ஷன்னா கான் அதிகமாக விளம்பரங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால், பல்வேறு கொடைகளை செய்து வருகிறார்.

சாஹித் கான் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது மகள் ஷன்னா கான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் அமெரிக்காவில் தான். இவர், அமெரிக்காவில் உள்ள இல்லினியோஸ் என்ற இடத்தில்தான் கல்லூரி வரை படித்தார். பின்பு, அமெரிக்க எம்பி ஒருவருக்கு மாவட்ட உதவியாளராக இருந்தார்.

வறுமையில் உள்ளவர்களுக்கு உதவிகளை செய்வதற்காக ஜக்குவார் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், தொழில்துறையிலும் இருந்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 20 மில்லியன் டொலர் ஆகும்.

இவர், கல்வி சார்ந்த பணிகளுக்கு பல நன்கொடை அளித்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் இல்லினியோஸ் கால்நடை மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு ரூ.123 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். 
 

Leave a Reply