• Welcome to TamilsGuide
செய்திகள் 1

30 நாள் மது அருந்தாமல் இருந்தா இவளோ நன்மையா?

இலங்கை

பெரும்பான்மையானோருக்கு மதுவை கைவிடுவது என்பது சற்று கடினமான விஷயம்தான். அப்படி பலர் இனி மது அருந்தவே கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்து அதை கைவிட்ட கதைகள் பல இருக்கும். ஆனால் உண்மையில் நீங்கள் மதுவை 30 நாட்களுக்கு குடிக்காமல் இருந்து பாருங்கள்… நீங்களே உங்கள் உடலில் நடக்கும் நன்மைகளை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்!

சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி மதுவை கைவிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்பது அவர்களின் குடிப்பழக்கத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உதாரணத்திற்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மது குடிப்பதை தவிர்த்தால் உடலளவிலும் , மனதளவிலும் பல மாற்றங்களை உணரக்கூடும். அதாவது முடிவெடிக்கும் விஷயங்களில் தெளிவாக இருபார்கள், தூக்கம் சீராகும், சுறுசுறுப்பாக இருப்பார்கள், மூன்று வேளை உணவு சீராக இருக்கும். குறிப்பாக உடல் எடையும் குறையலாம்

அமெரிக்க உணவுமுறை வழிகாட்டுதலின்படி மிதமாக மது அருந்தும் பழக்கம் என்பது ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் என்பதே அதிகபட்சம் என்கிறது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். இந்த அளவு அதிகரித்தால் இதய நோய் , பக்கவாதம், எடை அதிகரிப்பு, மனநல பிரச்சனைகள் போன்றவை உண்டாகலாம். எனவே நீங்கள் எந்த வகை மதுப்பழக்கம் உடையவராக இருந்தாலும் சரி 30 நாட்களுக்கு மதுவை தவிர்த்துப் பாருங்கள்.

கல்லீரல் செயல்பாடுகள் சீராகும் : மருத்துவர்களின் கூற்றுப்படி அதிக மதுப்பழக்கம் கொண்டவர்களானாலும் , மிதமான மதுப்பழக்கம் கொண்டவர்களானாலும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு என்பது உறுதி. குறிப்பாக சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் உயிரணுக்களின் சிதைவு, வீக்கம் மற்றும் திசுக்களின் நார்ச்சத்து தடித்தல் போன்ற பாதிப்பால் அவதிப்படலாம். எனவே நீங்கள் மதுப்பழக்கத்தை கைவிட்டால் இந்த பாதிப்பு அப்படியே படிப்படியாக குறைந்து கல்லீரலின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவும் ஒரே வாரத்தில் சீராகும் என்கின்றனர்.

இதய ஆரோக்கியம் மேம்படும் : வல்லுநர்களின் கூற்றுப்படி, மதுப்பழக்கம் கெட்ட கொலஸ்ட்ரால்களின் அளவை அதிகரிக்கும். பின் இது இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இதய பாதிப்புகளை உண்டாக்கும். எனவே இதை தவிர்க்க வேண்டுமெனில் மதுவை கைவிடுதல் சிறந்த வழியாக இருக்கும்.

புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும் : மதுப்பழக்கம் மனிதனின் புற்றுநோய் செல்களை ஊக்குவிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை american journal of public health ஆய்விலும் நிரூபித்துள்ளனர். அதில் 3.5 சதவீதம் புற்றுநோய் இறப்புக்கான காரணம் மதுப்பழக்கம் மட்டுமே என்பதை கண்டறிந்துள்ளது. குறிப்பாக கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் போன்றவையே அதிகமாக உருவாகிறது.

எடை இழப்பு : அனைத்து வகையான மதுவும் அதிக கலோரிகளை கொண்டவை. எனவே அவற்றை தவிர்ப்பது நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தை கொண்டு வரும். பலருக்கும் மதுப்பழக்கமே வயிற்றில் தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே இதை கைவிடுவது நிச்சயம் பலனளிக்கும்.

மூளை செயல்பாடுகளை மேம்படுத்தும் : அதிக மதுப்பழக்கம் ஞாபக மறதி மற்றும் மூளை செயல்பாடுகளில் தாமத்தை அதிகரிக்கும். மதுப்பழக்கம் கொண்ட பலர் குறிப்பிட்ட மூளை பாதிப்புக்கு ஆளாகி மூளை சிதைவு, மூளை செயல்பாடுகளில் தோய்வு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இதனால் எந்தவொரு செயலையும் அவர்களால் செய்ய முடியாமல் போகும். எதிலும் கவனம் இருக்காது. எனவே இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமெனில் மதுவை கைவிடுவதே சிறந்த வழியாக இருக்கும்.
 

Leave a Reply